மாளவிகா மோகனன் பிறந்தநாளுக்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்த பரிசு.! பொண்ணுன்னா பேய்யே இறங்க்கும்னு சொல்லுவாங்க நம்ம இயக்குனர் இறங்க மாட்டாரா.

0

Gift given by Lokesh Kanagaraj for Malavika Mohanan’s birthday : தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே மாஸ் நடிகர் மற்றும் பிரபலங்களுக்கு பிறந்தநாள் வரும்பொழுது காமன் டிபி போஸ்டரை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள், அந்த வகையில் சமீபத்தில் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் ஆகியோர்களின் பிறந்தநாளுக்கு காமன் டிபி போஸ்டரை திரையுலக பிரபலங்கள் அனைவரும் வெளியிட்டார்கள்.

இந்த காமன் டிபி போஸ்டர் சமூகவலைதளத்தில் காட்டுத்தீ போல் வைரல் ஆகியது, இந்த நிலையில் மாஸ் நடிகர்களுக்கு தான் காமன் டிபி போஸ்டரை வெளியிட்டார்கள் அந்த வகையில் தற்பொழுது நடிகைகளுக்கும் காமன் டிபி போஸ்டரை வெளியிட்டு வருகிறார்கள்.

Malavika Mohanan
Malavika Mohanan

இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் மாஸ்டர் திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ள மாளவிகா மோகனனுக்கு (Malavika Mohanan) தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் அதுமட்டுமில்லாமல் சிறப்பு பரிசாக மாளவிகா மோகனன் போஸ்டரை காமன் டிபியாக வெளியிட்டுள்ளார்.

அதுவும் மாளவிகாவுக்கு மிகவும் பிடித்த பிங்க் கலரில் அட்டகாசமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டரை அவரது ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள், மாளவிகா மோகனன் இதற்குமுன் ரஜினியுடன் பேட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார் அதனைத்தொடர்ந்து தளபதியின் மாஸ்டர் திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

Malavika Mohanan
Malavika Mohanan

ஊரடங்கு காரணமாக இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய் கொண்டே போகிறது, மாஸ்டர் திரைப்படத்தில் மாளவிகா மோகனன் கதாபாத்திரம் அதிக எதிர்பார்ப்பில் ரசிகர்களிடம் இருந்து வருகிறது, இந்த திரைப்படம் வெளியான பிறகு மாளவிகா மோகனன் அவர்களுக்கு  அதிக பட வாய்ப்புகள் அமையும் என கூறப்படுகிறது.

இதோ லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட போஸ்டர்.