ஆக்ஸ்போர்ட் ஆப் சவுத் இந்தியா என நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை வர்ணிப்பார்கள் அந்த அளவு பாளையங்கோட்டையில் கல்வி நிறுவனங்கள் அதிகமாக இருக்கின்றன. அதேபோல் ஒழுக்கத்துடன் கூடிய தரமான கல்வி வழங்கப்படுவதால் நெல்லை மாவட்டம் மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களில் இருந்தும் மாணவர்கள் கல்வி பயில்வது வழக்கம்.
அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் மாணவிகள் மது குடித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது நெல்லை அரசு உதவிபெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் ஆயிரக்கணக்கான மாணவிகள் படிக்கின்றார்கள். அந்த பள்ளியில் சில தினங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது மாணவிகள் தங்களின் கரங்களில் மது உடன் கூடிய கிளாசை பிடித்துள்ளார்கள் அப்பொழுது ஒரு மாணவி சியர்ஸ் அடிக்குமாறு கேட்கவும் அனைத்து மாணவிகளும் கிளாசை தூக்கி காட்டுகிறார்கள். அதே போல் அதை வேடிக்கை பார்த்த வேறு சில மாணவிகளும் அந்த இடத்தில் இருந்து வெளியே செல்கிறார்கள் பள்ளியில் வகுப்பறையில் இந்த சம்பவம் நடந்துள்ளதால் பெற்றோர்களை பெரும் அதிர்ச்சி குள்ளாக்கியது.
இது தொடர்பாக வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானதால் உடனே பள்ளி நிர்வாகத்தின் சார்பில் விசாரணையை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட மாணவிகளை பெற்றோரை வரவழைத்து சஸ்பெண்ட் செய்துள்ளார்கள் இந்த சம்பவத்தில் 10 மாணவிகள் ஈடுபட்டுள்ளதால் முதல் கட்ட விசாரணையில் ஆறு மாணவிகள் சிக்கியுள்ளார்கள் இதனால் அவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளார்கள் மேலும் இது தொடர்பான விசாரணை பெற்று வருவதாக கூறப்படுகிறது.