சினிமா உலகம் புதியதை நோக்கி நகர நகர அதற்கு ஏற்றார் போல இளம் இயக்குனர்கள் அப்டேட்டாகி நல்ல படங்களை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விரல்விட்டு என்னும் அளவிற்கு படங்களை எடுத்திருந்தாலும் அந்த ஒவ்வொரு படமும் நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றதது.
மற்றும் வசூல் ரீதியாகவும் அடித்து நொறுகியது. கடைசியாக உலகநாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம் படத்தை எடுத்தார் இந்த படம் வசூலில் 410 கோடிக்கு மேல் அள்ளி புதிய சாதனை படைத்தது. இதனால் தற்பொழுது லோகேஷ் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். அடுத்தடுத்து படம் பண்ணவும் ரெடியாக இருக்கிறார்.
அந்த வகையில் நடிகர் விஜயுடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து தளபதி 67 படத்தை எடுக்க இருக்கிறார். அந்த படம் முழுக்க முழுக்க ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது. வெகு விரைவில் சூட்டிங் நடக்கப்படுகிறது. தளபதி 67 படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு லோகேஷ் அடுத்ததாக நடிகர் கார்த்தியை வைத்து கைதி 2 திரைப்படத்தை எடுக்க இருக்கிறார்.
கைதி முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றது தொடர்ந்து இரண்டாவது பாகவதற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்து காணப்படுகிறது இந்த திரைப்படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்க வில்லனாக யார் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அந்த நிலையில் தற்போது ஒரு புதிய தகவல் கிடைத்துள்ளது அதாவது இந்த திரைப்படத்தில் வில்லனாக ராகவா லாரன்ஸை நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் திட்டம் போட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
மாஸ்டர் படத்திற்கு எப்படி விஜய் சேதுபதி ஒரு சூப்பரான ரோலிங் மிரட்டினாரோ அதே போல கைதி 2 திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் மிகப்பெரிய அளவில் மிரட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெகு விரைவிலேயே வெளிவரும் என சொல்லப்படுகிறது