கஜினி திரைப்படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு பிரபல நடிகை அதிரடி.!

0

2005 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியாகிய திரைப்படம் கஜினி இந்த திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் தான் இயக்கியிருந்தார் படத்தில் சூர்யாவுடன் இணைந்து அசின், நயன்தாரா என பலர் நடித்திருந்தார்கள் 2017 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் இந்தியில் வெளியானது இதனையும் முருகதாஸ் தான் இயக்கியிருந்தார்.

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா தற்போது உச்ச நடிகைகளில் ஒருவராக இருக்கிறார், அதுமட்டுமில்லாமல் சமீப காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர்.

இந்த நிலையில் கஜினி படத்தில் நடித்த நயன்தாரா தற்போது அவர் செய்த தவறு பற்றி வெளிப்படையாக கூறியுள்ளார், அதுமட்டுமில்லாமல் பிரபல இயக்குனர் இப்படி செய்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை என வருத்தத்துடன் கூறியுள்ளார். அவர் கூறியதாவது கஜினி திரைப்படத்தில் நடித்து தான் என்னுடைய மிகப்பெரிய தவறு, ஏ ஆர் முருகதாஸ் அவர்கள் தன்னிடம் சொன்ன பொழுது என்னுடைய கேரக்டர் முக்கியத்துவம் படத்தில் வெளிப்படவில்லை அதனாலேயே அதை பெரிதும் வெறுப்பதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நயன்தாரா ரஜினியுடன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் பேட்டியில் அவ்வாறு கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.