சூப்பர் ஸ்டார் படம் கிடைச்சுடுச்சு என சூர்யா படத்தை டீலில் விட்ட பிரபல இயக்குனர்.! இது எங்கே போய் முடியுமோ

தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்றுவரை சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த் இவர் நடிப்பில் பல திரைப்படங்கள் வெளியாகி தமிழ் சினிமாவையே புரட்டி போட்டுள்ளது. மேலும் ரஜினியை வைத்து இயக்குவதற்காக பல இயக்குனர்கள் தவமாய் தவம் இருக்கிறார்கள், ஏனென்றால் சூப்பர்ஸ்டார் திரைப்படத்தை இயக்கி விட்டால் மற்ற நடிகர்களின் திரைப்படத்தை ஈசியாக இயக்கி விடலாம் என்ற எண்ணம் தான்.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடைசியாக தர்பார் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த திரைப்படம் வெற்றிப்படமாக இருக்கவேண்டுமென என்னி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா உடன் கூட்டணி வைத்துள்ளார் சிறுத்தை சிவா ரஜினியை வைத்து முதன்முறையாக இந்த திரைப்படத்தை இயக்குகிறார் அதனால் ரசிகர்கள் மத்தியில் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் இந்த திரைப்படத்திற்கு டைட்டிலாக அண்ணாத்த என வைத்துள்ளார்கள் இந்த திரைப்படம் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி தினத்தை முன்னிட்டு உலக அளவில் வெளியாக இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். சிறுத்தை சிவா ரஜினி திரைப்படத்தை இயக்குவதற்கு முன்பே சூரியாவின் திரைப்படத்தை இயக்க இருந்தார். சிறுத்தை சிவாவின் திரைப்படத்தில் சூர்யா கமிட்டானார் ஆனால் சூப்பர் ஸ்டார் திரைப்படம் கிடைத்ததும் சூர்யாவை டீலில் விட்டு விட்டார்.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் தன்னுடைய அடுத்த திரைப்படத்தையும் சிவா அவர்களுக்கு கொடுக்க இருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது. ஆனால் சூர்யாவின் திரைப்படம் டீலில் இருப்பதால் சிறுத்தை சிவா அவர்கள் சூர்யா திரைப் படத்தை முடித்த பிறகு ரஜினி திரைப்படத்தை இயக்க வேண்டும் என திட்டவட்டமாக முடிவெடுத்துள்ளாராம் ஏனென்றால் அண்ணாத்த திரைப்படத்திற்காக சூர்யா திரைப்படத்தை டீலில் விட்டதால் மீண்டும் இதுபோல் தவறான செயலை செய்யக் கூடாது என சூர்யா திரைப்படத்தை  முடித்தபிறகு சூப்பர் ஸ்டாரின் அடுத்த திரைப்படத்தை பார்த்துக் கொள்ளலாம் என முடிவு எடுத்துள்ளார்.

எனவே சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற நவம்பர் மாதம் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது மேலும் சூர்யா அவர்கள் இயக்குனர் பாலாவின் ஒரு திரைப் படத்திலும் கமிட்டாகியுள்ளார் எனவே சூர்யா சிறுத்தை சிவா மற்றும் பாலா என மாறிமாறி ஒரே நேரத்தில் இருவரின் படத்தில் நடிக்க இருக்கிறார் அதற்காக குறிப்பிட்ட தேதியையும் ஒதுக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

siruthai siva
siruthai siva

இந்தநிலையில் அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் இணையப் போகிறார் என்ற செய்தி இணையதளத்தில் பட்டையை கிளப்பி வருகிறது.

Leave a Comment