குக்கூ குக்கூ பாடலுக்கு தளபதி விஜய் ஸ்டைலில் நடனமாடிய பிக்பாஸ் கேப்ரில்லா.! வைரலாகும் வீடியோ

0

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 7c சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் நடிகைகளை கேபிரில்லா.இவருக்கு நடனத்தின் மீது அதிக ஆர்வம் இருந்ததால் நடன நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். அந்தவகையில் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தான் இவருக்கு சில சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் குழந்தை நட்சத்திரமாக பிரபலமடைந்த இவருக்கு வெள்ளித்திரையிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் கூட்டணியில் வெளிவந்த 3 திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

இத்திரைப்படத்தினை தொடர்ந்து சென்னையில் ஒரு நாள், அப்பா உள்ளிட்ட சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தார்.ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து இருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பதற்காக தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை தொடங்கினார்.

அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறி வந்துள்ளார் இப்படிப்பட்ட நிலையில் தான் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.

அந்த வகையில் இந்நிகழ்ச்சியில் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்று வந்த இவருக்கு இந்நிகழ்ச்சியில் நாம் வெற்றி பெற மாட்டோம் என்பதை முன்கூட்டியே கணித்து ஐந்து லட்ச ரூபாய் பெட்டியை எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

இதனால் பலரும் இவரை பாராட்டினார்கள். இந்நிலையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் என்ஜாய் என்ஜாமி பாடலுக்கு நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் விஜய் ஸ்டைலும் இருக்கிறது என்று கூறி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.