ஜென்டில்மேன் திரைப்படத்தில் இந்த இரண்டு முன்னணி நடிகர்களும் நடிக்க மறுத்தார்கள்.! லீக் ஆனா பல நாள் ரகசியம்

0

gentleman tamil movie : 1993 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கேஎஸ் ரவிக்குமார் தயாரிப்பில் வெளியாகிய திரைப்படம் ஜென்டில்மேன். இந்த திரைப்படத்தில் அர்ஜுன் கதாநாயகனாக நடித்திருந்தார் அதுமட்டுமில்லாமல் அர்ஜுனுக்கு ஜோடியாக மதுபாலா நடித்திருந்தார் மேலும் கவுண்டமணி, எம் என் நம்பியார் கௌதமி, செந்தில், வினித், பிரபுதேவா, மனோரமா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

ஒரு கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட 3 கோடி வசூல் செய்த திரைப்படம் இந்த ஜென்டில்மேன், இந்த திரைப்படத்தின் சிறப்பு சங்கர் முதன் முதலில் இயக்கிய திரைப்படம்தான் இது, அந்த காலத்திலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்ற பெருமையும் இந்த திரைப்படத்திற்கு உண்டு. இது திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் தான் இசை அமைத்திருந்தார் படத்தின் பாடல்கள் அனைத்தும் மாபெரும் ஹிட்டடித்தது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஜென்டில்மேன் திரைப்படத்தில் முதன் முதலில் கதாநாயகனாக நடிக்க சரத்குமாரை தான் ஷாங்கர் அணுகினார், அப்பொழுது சரத்குமார் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார் அதனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகிவிட்டார்.

அதன் பிறகு இந்த திரைப்படத்தை ஷங்கர் கமலஹாசனிடம் எடுத்துக் கொண்டு சென்றார், கமலஹாசன் கதையை கேட்டுவிட்டு இப்போதுதான் இது போல் திரைப்படத்தில் நடித்தேன் பிராமின் கதாபாத்திரமான மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தில் செய்துள்ளேன் ஆனால் இது சரிவராது என கூறிவிட்டார்.

பிறகு தான் இந்த திரைப்படத்தை பல நடிகர்களிடம் கொண்டு சென்றார் இறுதியில் நடிகர் அர்ஜுனை வைத்து இயக்கினார். இயக்குனர் ஷங்கர் படித்துக் கொண்டிருக்கும்போது இன்ஜினியர் படிக்க வேண்டும் என்றுதான் ஆசை ஆனால் அவரது ஆசை வசதியில்லாததால் நிறைவேறவில்லை அவரின் ஆழ்மனதில் பதிந்த அந்த விஷயங்களை கருவாகக் கொண்ட தான் ஜென்டில்மேன் திரைப்படத்தை உருவாக்கினார்.