முன்னணி நடிகருக்கு ஜோடியாகும் ஜெனிலியா.! அதுவும் 8வருடம் கழித்து.!

பாய்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் அவ்வளவு சினிமா உலகிற்கு அறிமுகமானவர் ஜெனிலியா. இப்படத்தினை தொடர்ந்து அவர் ஜெயம்ரவியுடன் சந்தோஷ் சுப்பிரமணியம், சச்சின், உத்தமபுத்திரன் போன்றபடங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் அத்தகைய படங்களில் குழந்தைத்தனமான நடிப்பின் மூலம் பல கோடி ரசிகர்களையும் கவர்ந்தார்.

ஆரம்பத்தில் தமிழில் படங்களில் நடித்து இருந்தாலும் பெரும்பாலும் ஹிந்தி ,தெலுங்கு சினிமா மீது அதிக கவனத்தை செலுத்தி வந்தார். அனைத்து மொழி படங்களிலும் தனது வெகுளித்தனமானநடிப்பை வெளிப்படுத்தி  அவருக்கென ஒரு தனி கூட்டத்தை அமைத்திருந்தார் இந்த நிலையில் திடீரென 2012ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக படிப்படியாக விலகினார். இருப்பினும் வருகின்ற ஒரு சில படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்து ஒவ்வொரு தனது ரசிகர்களுக்கு விருந்து படைத்து வந்தார்.

இந்த நிலையில் திடீரென சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார் அதுவும் தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மலையாளத்தில் வெளிவந்து மிகப்பெரிய ஹிட்டடித்த லூசிபர் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது இப்படத்தை சாஹோ படத்தை இயக்கிய சுஜித் அவர்கள் இப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது லூசிபர் படத்தினல் மஞ்சுவாரியர் தனது நடிப்பை வெளிப்படுத்தினார்.

அந்த கேரக்டரில் ரீமேக் படத்தில் ஜெனிலியா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் மூலம் எட்டு ஆண்டுகள் கழித்து திரும்பவும் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் ஜெனிலியா என்பது ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment