35 வயது ஆகியும் இன்னமும் பாய்ஸ் பட ஹரிணி போல் ஜொலிக்கும் ஜெனிலியா.! வைரலாகும் புகைப்படம்…

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை ஜெனிலியா. என்னதான் இவருக்கு இந்த படம் முதல் படமாக இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

இதனைத் தொடர்ந்து நடிகை ஜெனிலியா நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சச்சின், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான சந்தோஷப் பிரமணியம், தனுஷ் நடிப்பில் வெளியான உத்தமபுத்திரன், விஜய் நடிப்பில் வெளியான வேலாயுதம், உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், உள்ளிட்ட பிறமொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து நடிகை ஜெனிலியா சமீபத்தில் தன்னுடைய கணவருடன் 20 ஆண்டு கால திரை வாழ்க்கையை கொண்டாடி உள்ளார். இந்த புகைபடம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது கடந்த 2003 ஆம் ஆண்டு ரித்தீஷ் தேஷ்முக் மற்றும் ஜெனிலியா இருவருமே இணைந்து நடித்த திரைப்படம் துஜே மேரி கசம் இந்த திரைப்படத்தின் மூலம் ஹிந்தியில் இருவருமே அறிமுகமானவர்கள்.

அதன் பிறகு முதல் படத்திலேயே இருவருக்கும் காதல் ஏற்பட நீண்ட வருடங்களுக்கு பின்னர் 2012 ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காத ஜெனிலியா தற்போது ஒரு சில திரைப்படங்களில் தலைகாட்டி வருகிறார்.

மேலும் நடிகை ஜெனிலியாவும் அவருடைய கணவர் ரித்தீஷ்சும் ஒரே படத்தில் அறிமுகமானதால் இந்த இரண்டு நட்சத்திர ஜோடிகளும் திரையுலகில் அறிமுகமாகி 20 வருடங்களை கடந்து விட்டோம் என்று மும்பையில் இன்று ரசிகர்கள் மத்தியில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதுமட்டுமில்லாமல் இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் இந்த தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள் மேலும் 20 வருடத் திரை வாழ்க்கையை கடந்தும் இன்று வரையிலும் ஜெனிலியா மற்றும் அவருடைய கணவர் ரித்தீஷ் ஆகிய இருவருமே முதல் படத்தில் பார்த்தது போலவே அப்படியே ஜொலிக்கிறார்கள் என்று கூறி வருகின்றனர்.

இதோ அந்த புகைபடம்…

genelia
genelia
genelia
genelia

Leave a Comment