யூடியூப் மூலம் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய ஜிபி முத்து.! அவருடைய ஒரு மாத வருமானம் எவ்வளவு தெரியுமா.?

சமீப காலங்களாக சோசியல் மீடியாவின் மூலம் பிரபலமடைந்த பலரும் நடிகர், நடிகைகளை மிஞ்சுமலருக்கு ரசிகர்களை தங்களுக்கு என உருவாக்கியுள்ளார்கள் அந்த வகையில் டிக் டாக் மற்றும் யூடியூப் வீடியோக்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் ஜிபி முத்து. இவர் ஆரம்ப காலகட்டத்தில் பல கேலி, கிண்டலுக்கும் ஆளானார். மேலும் தொடர்ந்து ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வந்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியது.

மேலும் இவருடைய பேச்சி ரசிகர்களை கவர்ந்தது. இவருடைய வீடியோவை பார்த்து சிரிக்காதவர்கள் கிடையாது என்று தான் கூற வேண்டும். அதன் பிறகு தான் தனக்கென ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்து அதில் வீடியோக்களை பதிவிட்டு வந்தார் இதன் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது கடந்த மே மாதம் 2020 ஆம் ஆண்டு இவருடைய யூடியூப் சேனல் லாபகரமாக சென்று கொண்டிருக்கிறது அந்த வகையில் இவர் 1.24 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை வைத்துள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது அதனுடையவர்.

594 வீடியோக்களையும் பதிவிட்டுள்ளார் இவருடைய ஒவ்வொரு வீடியோக்கும் இலட்சக்கணக்கில் லைக்குகளும் இருந்து வருகிறது இவ்வாறு இவர் பதிவிடும் ஒவ்வொரு வீடியோவும் 4 லட்சத்துக்கும் மேல் வியூசுக்களை பெற்று வரும் நிலையில் நல்ல வருமானத்தையும் பெற தொடங்கினார். அந்த வகையில் ஜிபி முத்து குறைந்தது ஒரு மாதத்திற்கு 1.25 லட்சம் வருமானம் பெற்று வருகிறார் இது குறைந்தபட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கது இதைவிட அதிகமாகவும் இவர்கள் வருமானம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட நிலையில் சில வருடங்கள் இருக்கு முன்பு கொரோனா பாதிப்பால் ஊரடங்கு போன்ற பல பிரச்சனைகள் ஏற்பட்டது இதனால் ஜிபி முத்து வருமானத்திற்கு வழியில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறார் மேலும் தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற முடியாத நிலையில் தற்கொலை வரை முயன்றது பலருக்கும் தெரியும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே வெளிப்படையாக தெரிவித்து இருந்தார்.

மேலும் யூடியூப் சேனல் மூலம் எனக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது நான் நிம்மதியாக இருக்கிறேன் என்று அவர் கூறியிருக்கிறார். அந்த வகையில் தற்பொழுது இவர் யூடியூப் சேனல் மூலம் அதிக அளவிலும் சம்பாதித்து பிரபலம் அடைந்துள்ளார் இவ்வாறு ஜிபி முத்துவிற்கு விஜய் டிவி நல்ல வருமானத்தை தரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version