‘டாடா’ பட வெற்றிக்குப் பிறகு தனது சம்பளத்தை உயர்த்திய கவின்.!

சின்னத்திரையின் மூலம் அறிமுகமான பல நடிகர்கள் தற்பொழுது வெள்ளித்திரையில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்த மிகவும் பிசியாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ சங்கர் இவர்களுடைய வரிசையில் தற்பொழுது நடிகர் கவினும் சேர்ந்துள்ளார்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமான நிலையில் இதனை அடுத்து இன்னும் சில சீரியல்களில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியின் மூலம் உலகமெங்கும் பிரபலமான கவின் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் இவருடைய நடிப்பில் வெளிவரும் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து. பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியினை கண்டு வருகிறது இதன் காரணத்தினால் தொடர் வெற்றியினால் தற்போது தன்னுடைய சம்பளத்தினை கவின் உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

நடிகர் கவின் நடிப்பில் கடைசியாக டாடா படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது. இந்த படத்தினை தொடர்ந்து மற்றொரு புதிய திரைப்படத்தில் இணைந்திருக்கும் நிலையில் எந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்க இருக்கிறார் எனவும் மேலும் அந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு முன்பு கவின் நடிப்பில் வெளிவந்த நட்புனா என்னானு தெரியுமா, லிஃப்ட் போன்ற படங்களும் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் தற்போது டாடா பல வெற்றிக்கு பிறகு கவின் இதுவரையிலும் வாங்கிய சம்பளத்தை விட தற்பொழுது ஒரு கோடிக்கும் மேல் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment