பிரியங்கா அருள் மோகன் இல்லை விஜய் பட நடிகையுடன் கூட்டணி சேர்ந்த கவின்.!

0
KAVIN
KAVIN

தமிழ் சினிமாவில் தற்போது தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களை தந்து மிகவும் பிசியாக இருந்து வருபவர் தான் நடிகர் கவின் இவருடைய நடிப்பில் கடைசியாக டாடா படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றினை பெற்ற நிலையில் இவருடைய சம்பளத்தையும் ஒன்றரை கோடிக்கு மேல் உயர்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட நிலையில் இதனை அடுத்து கவின் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வரும் நிலையில் சில நாட்களுக்கு முன்பு கவின் அடுத்த படத்தினை டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் போன்ற திரைப்படங்களில் நடித்த பிரபலமான பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடிக்கப் போவதாகவும் தகவல் வெளியானது.

ஆனால் தற்பொழுது கவினுக்கு ஜோடியாக விஜய் பட நடிகை நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தினை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்க இருக்கும் நிலையில் அனிருத் திசையமைக்கிறாராம். கவினின் நெருங்கிய நண்பர் அனிருத் என்பதால் கேட்டவுடன் இதற்கு ஒப்புக்கொண்டாராம்.

இவ்வாறு தற்பொழுது சினிமாவில் மிகவும் வளர்ச்சியடைந்திருக்கும் நிலையில் விஜய், அஜித், ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்து வரும் அனிருத் கவினின் மூன்றாவது படத்திலேயே இசையமைக்க இருப்பது சாதாரண விஷயம் இல்லை. மேலும் இந்த படத்தில் மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர் ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நிலையில் அதனை தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் தனுசுடன் மாறன் உள்ளிட்ட மூன்று தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கும் நிலையில் மாளவிகா மோகனன் மலையாள நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தமிழில் இவருடைய 4வது படம்த்தில் கவின்வுடன் கைகோர்க்கும் நிலையில் இவர்களுடைய கூட்டணியில் உருவாகும் இந்த படம் முழுக்க முழுக்க காதலை மட்டுமே மையப்படுத்தி உருவாக்க பட இருப்பதாக கூறப்படுகிறது இதனை அடுத்து மற்ற பிரபலங்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.