விறுவிறுப்பாக எழுதி முடித்த என்னை அறிந்தால் 2 படத்தின் கதை.! இந்தமுறை விக்டர் வில்லைன் இல்லிங்கோ.? இந்த முரட்டு வில்லன்தாங்கோ.?

yennai-arinthal
yennai-arinthal

gautham vasudev yennai arindhaal movie 2nd part : 2015ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் என்னை அறிந்தால் இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு வில்லனாக விக்டர் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் அருண்விஜய், அதுமட்டுமில்லாமல் திரிஷா, அனுஷ்கா செட்டி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள்.

என்னை அறிந்தால் திரைப்படம் 65 கோடிக்கு எடுக்கப்பட்ட திரைப்படமாகும் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூலில் கல்லா கட்டியது இதன் வசூல் 100 கோடியை எட்டியது, இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் தான இசையமைத்திருந்தார் படத்தை ஏ எம் ரத்தினம் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகம் எப்போது உருவாகும் என காத்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள், இந்த நிலையில் கௌதம் வாசுதேவ துருவநட்சத்திரம் திரைப் படத்தின் டப்பிங் பணிகளில் மிகவும் பிஸியாக இருக்கிறார், மேலும் கௌதம் வாசுதேவ் பிரபல ஆங்கில பத்திரிக்கைக்கு லைவ்வாக உரையாடல் செய்துள்ளார்.

அந்த உரையாடலின் பொழுது கௌதம் வாசுதேவ மேனன் என்னை அறிந்தால் படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையை எழுதி முடித்து விட்டதாகவும்  அது மிகவும் நன்றாக வந்துள்ளதாகவும் கூறினார். மேலும் கதாபாத்திரத்தின் அடுத்த கட்டத்தை வெளிப்படுத்துவதற்காக இந்த கதைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அஜித்திடம் இந்த கதையை கூறி திரைப்படம் எடுக்கப்படும் என்று கௌதம் வாசுதேவ மேனன் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் என்னை அறிந்தால் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையை உருவாக்குவது மிகவும் சவாலாக இருந்ததாகவும் கூறியுள்ளார், கண்டிப்பாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த திரைப்படம் பூர்த்தி செய்யும் எனவும் கூறினார் மேலும் முதல் கத்தில் அருண்விஜய் கதாபாத்திரம் முடிந்ததாம் இரண்டாவது பாகத்தில் வில்லனாக அர்ஜுன் தாஸ், விஜய்சேதுபதி மற்றும் சுதீப் இடம் பேச்சுவார்த்தை நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன அதனால் இரண்டாம் பாகத்தில் வில்லன் வேற லெவலில் இருப்பது உறுதி.