அட லியோ படத்தில் கௌதம் மேனன் கெட்டப்பு இதுதானா.! இணையதளத்தில் லீக்கான விஜய்யின் கதாபாத்திரம்.?

Gautham Vasudev Menon in Leo : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வருகிறது லியோ திரைப்படம் இந்த திரைப்படம் மிகப்பெரிய திரைப்படமாக உருவாகியுள்ளது. படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், சஞ்சய்தத், கௌதம் வாசுதேவ் மேனன், திரிஷா, மிஷ்கின் என மிகப் பெரியநட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள்.

இந்த நிலையில் leo திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது லோகேஷ் இயக்கியுள்ள இந்த திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதற்குள் டீசர், ட்ரெய்லர், ஆடியோ லான்ச் என அனைத்தும் அடுத்தடுத்த அப்டேட்களாக வர இருக்கின்றன.

இந்த நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கௌதம் மேனன் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது கௌதமேனனின் புகைப்படத்தை வைத்து விஜய்யின் கேரக்டரை ரசிகர்கள் கணித்து கூறியுள்ளார்கள் லியோ திரைப்படத்தில் விஜய்யுடன் திரிஷா சஞ்சய் தத், ஆக்சன் கிங் அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியவர்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பதால் கௌதம் மேனன் அவர்களுக்கு விஜயுடன் அதிக காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் ஏற்கனவே கௌதம் மேனன் லியோ திரைப்படத்தில் தன்னுடைய கேரக்டர் விஜய் உடன் பயணிப்பதாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது என கூறியிருந்தார் ஒருவேளை விஜயின் கேங்ஸ்டர் கேங்கில் கௌதமேனன் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கலாம் என கூறப்படுகிறது தற்பொழுது வெளியாகி உள்ள புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் போலீஸ் கெட்டப்பில் இருக்கிறார் அதனால் லியோ திரைப்படத்தில் கௌதமேனன் போலீஸாக தான் நடித்துள்ளார் என பலரும் கூறி வருகிறார்கள் லியோ திரைப்படத்தில் நடித்துள்ள பாபு ஆண்டனி அவரது மகன் ஆர்த்தார் ஆகியோருடன் போலீஸ் யூனிபார்மில் கௌதம் வாசுதேவ் மேனன் போட்டோ எடுத்துள்ளார்.

கௌதமேனன் போலீஸ் கெட்டப்பில் இருப்பதால் ஒருவேளை விஜயும் ஸ்பை ஏஜெண்டாக நடித்திருப்பாரோ என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

leo latest stills
leo latest stills