கௌதம் மேனனின் அடுத்த டார்கெட் இந்த ஹீரோ தான்.! அப்போ கதை வேற லெவல் தான்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சிம்பு அவர்கள் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு இந்த திரைப்படத்தை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்கள் இயக்கி உள்ளார் இந்த திரைப்படம் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது.

இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பு பெற்று வருகிறது இதனை தொடர்ந்து அடுத்த படத்திற்கு தயார் ஆகிவிட்டார் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் அடுத்ததாக பத்து தல திரைப்படத்தில் சிம்புவுக்கு வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.

அதனை தொடர்ந்து தற்போது இயக்குனர் கௌதம் மேனன் அடுத்த திரைப்படத்தில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் பொத்தினேன்  அவர்களை வைத்து அடுத்த படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இயக்குனர் கௌதம் மேனன் திரைப்படம் என்றாலே அது மாறுபட்ட கதைய அம்சத்தை கொண்டு உருவாக்கப்பட்டு அதை எப்படியாவது வெற்றி காண்பது அவருடைய நோக்கமாகும் அதே போல் இந்த திரைப்படமும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ராம் பொத்தினேன் நடிப்பில் வெளியான தீ வாரியார் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகவும் கடுமையான தோல்வியை சந்தித்தது. இந்த திரைப்படம் ஆரம்பத்தில்  ரசிகர்களிடம் பெரும் ஆதரவை பெற்று வந்தாலும் இந்த படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் தோல்வியை சந்தித்தது.

இந்த நிலையில் எப்படியாவது ஒரு வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் எண்ணி நடிகர் ராம் அவர்கள் தற்போது இயக்குனர் கௌதம் மேனனின் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

நடிகர் ராம் அவர்கள் வழக்கமாக மாஸ் ஆக்‌ஷன் கதாபாத்திரங்களில் நடிப்பதில் இருந்து விலகி வித்தியாசமான கதைகளம் கொண்ட படங்களில் நடிக்க தற்போது ஆர்வம் காட்டி வருவதாக இதிலிருந்து தெரிகிறது.

Leave a Comment