வெற்றிமாறனை ஒரேடியாக திருத்திய கௌதம் மேனன்..! எப்படி தெரியுமா..?

தமிழ் சினிமாவில் இதுவரை தோல்வியை துளி கூட சந்திக்காத ஒரு இயக்குனர் என்றால் அது வெற்றிமாறன் தான் அந்த வகையில் இவர் இயக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் வித்தியாசமாக இருப்பது மட்டும் இல்லாமல் ரசிகர்களுக்கு பிடித்த வண்ணம் இருப்பதன் காரணமாக மாபெரும் வெற்றி பெற்று வருகிறது.

அந்த வகையில் இவர் இயக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் கண்டிப்பாக விருது வாங்குவது வழக்கம் அந்த வகையில் தற்பொழுது இவர் பிரமாண்டமாக இயக்கி வரும் திரைப்படம் தான் விடுதலை இந்த திரைப்படம் மிக விரைவில் திரைக்கு வருவதற்கு காத்துக் கொண்டிருக்கிறது.

பொதுவாக இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் ஒரு நாளைக்கு அதிக அளவு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது அந்த வகையில் இந்த பழக்கம் இவருக்கு இருப்பதை நடிகை ஆண்ட்ரியா கூட ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பாக பேட்டி ஒன்றில் பேசிய பொழுது

தான் அதிக அளவு சிகரெட் பயன்படுத்தி வந்ததாகவும் ஒரு நாள் கௌதம் மேனன் இயக்கிய வாரணம் ஆயிரம் என்ற திரைப்படத்தை பார்த்தேன். அதன் பிறகு தான் சிகரெட் குடிப்பதை முற்றிலுமாக நிறுத்தி விட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார் மேலும் அதன் பிறகு நான் சிகரெட் குடித்ததே கிடையாது என்று வெற்றிமாறன் கூறியது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

எது எப்படியோ ஒரு இயக்குனர் திரைப்படத்தை பார்த்து மற்றொரு இயக்குனர் திருந்தியது மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு வெளிவந்த செய்தியின் மூலமாக கௌதமேனன் ரசிகர்கள் பலரும் வெற்றிமாறனை திருத்தியது எங்கள் இயக்குனர் தான் என இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

Leave a Comment