குறும்படத்தின் மூலம் கல்லா கட்டிய கௌதம் மேனன்.! எத்தனை லட்சம் தெரியுமா.?

gautham menon short film : பொதுவாக கௌதம் மேனன் திரைப்படம் என்றாலே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் அதுவும் சிம்பு கௌதம் மேனன் கூட்டணி என்றால் சொல்லவே வேண்டாம் அந்த அளவு ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிக்கும்.

இவர்கள் கூட்டணியில் வெளியாகிய விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது. பல இயக்குனர்கள் தங்களுடைய முந்தையக் திரைப்படத்தை இரண்டாம் பாகமாக இயக்க வேண்டுமென பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் இயக்குனர் கௌதம் மேனன் தன்னுடைய படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவெடுத்துள்ளார், ஆம் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை துவங்க இருக்கிறார், அதனால் அதேபோல் ஒரு குறும்படத்தை இந்த லாக் டவுனில் இயக்கியுள்ளார் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதேபோல ரசிகர்களிடம் கேலியும் கிண்டலுக்கும் ஆளானது, அதுமட்டுமல்லாமல் இந்த குறும்படம் தவறான கண்ணோட்டத்தை குறிக்கும் விதமாக இருந்தது எனவும் பலரும் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு வந்தார்கள், சில நெட்டிசன்கள் மீம்ஸ் கிரியேட் செய்து தெறிக்க விட்டார்கள். இந்த நிலையில் கௌதம் மேனன் இயக்கிய கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படம் ஏழு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

இந்த ஒரே ஒரு குறும்படத்தின் மூலம் கௌதம் மேனன் 20 லட்சத்திற்கும் மேல் லாபம் பார்த்துள்ளதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது ஒரு குறும்படத்திற்கு போய் இவ்வளவு லாபமா என அனைவரும் மூக்கின் மேல் விரல் வைக்கும்படி அமைந்துவிட்டது.

Leave a Comment