தர லோக்கலா இறங்கி செய்யலாம்ன்னு இருக்கேன்.! ப்ளு சட்டை மாறன் குறித்து கௌதம் வாசுதேவ்..

gowdham menon
gowdham menon

நடிகர் சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் வெந்து அணிந்தது காடு இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது அந்த வகையில் வெளியான 4 நாட்களில் 40 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் நடித்துள்ள அனைத்து கேரக்டர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. சிம்பு இந்த திரைப்படத்தில் தன்னுடைய மிகவும் கடின உழைப்பை செலுத்தி இருப்பதாகவும் வேற லெவலில் இருப்பதாகவும் அனைவரும் கூறி வருகிறார்கள்.இவ்வாறு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வரும் இந்த படத்தினை சிலர் நெகட்டிவ் கமெண்ட்களை தந்துள்ளார்கள்.

அதாவது குறிப்பாக ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை கழுவி ஊற்றும் புளு சட்டை மாறன் இந்த படத்தையும் கிண்டல் செய்து விமர்சித்துள்ளார்.இந்த படம் குறித்த பேட்டியில் இயக்குனர் கௌதம் மேனன் ஒரு படத்தை விமர்சனம் செய்யும் பொழுது மனசாட்சி உடன் விமர்சனம் செய்ய வேண்டும் என்றும் அந்த படத்தில் உள்ள குறைகளை தாராளமாக சுட்டிக் காட்டலாம் என்றும் ஆனால் அதற்கு ஒரு கண்ணியம் வேண்டும் எனவும் கூறி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து ப்ளூ சட்டை மாறன் விமர்சனத்தை கண்டு கொள்ள வேண்டாம் என்று பலர் சொல்வார்கள் என்றும் ஆனால் என்னை பொறுத்தவரை இறங்கி ஏதாவது செய்யலாம் என்று நினைக்கிறேன் என்றும் அவர் மிகவும் ஆத்திரத்துடன் கூறியிருந்தார்.

மேலும் ப்ளூ சட்டை மாறன் மட்டுமின்றி படத்தின் கதையை நடிப்பை விமர்சிக்கலாம் நடிகர், நடிகைகள், இயக்குனர்களை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்பவர்களுக்கு கௌதம் மேனன் எடுக்கப்போகும் நடவடிக்கை எப்படி இருக்கும் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.