ஆர்யாவுக்கே டஃப் கொடுக்க மிரட்டலான தோற்றத்திற்கு மாறிய கௌதம் கார்த்திக்.! புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்.!

2013 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய கடல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக், இந்த திரைப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார், படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருந்தது, இந்த திரைப்படத்தை தொடர்ந்து கௌதம் கார்த்திக் ஹர ஹர மகாதேவி, எண்ணமோ எதோ, இருட்டு அறையில் முரட்டு குத்து, மிஸ்டர் சந்திரமவுலி, தேவராட்டம் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.

உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் மிக வேகமாக பரவி வருகிறது, மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கிறார்கள் இந்த வைரஸில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள் பல பிரபலங்கள்.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது அதனால் பல பிரபலங்கள் வீட்டிலிருந்து எங்கும் செல்லாமல் வீட்டிலேயே உடற்பயிற்சி போன்ற செயல்களை செய்து வருகிறார்கள்.

கௌதம் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், அந்த வீடியோவில் வொர்க் அவுட் செய்து விட்டு மிரட்டலாக அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் இணைத்துள்ளார் அதில் கௌதம் கார்த்திக் நீல முடிவுடன் வெறித்தனமாக மிரட்டுகிறார் இதனைக்கண்ட ரசிகர்கள் இது எந்த திரைப்படத்திற்கான மாற்றம் என கேள்வி கேட்டு வருகிறார்கள்.

Leave a Comment