ஜஸ்பிரித் பும்ராவின் பந்தை நாலாபக்கமும் அடித்து நொறுக்க கூடிய ஒரு இவர் தானாம் – கௌதம் கம்பீர்.! யாரை சொல்லுகிறார் தெரியுமா.?

0

சமீபகாலமாக இந்திய அணி மற்றும் ஐபிஎல் போட்டிகளில் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜஸ்பிரித் பும்ரா இவர் ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பல வருடங்களாக விளையாடி வருகிறார் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வெல்வதற்கு ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் சிறப்பாக இருந்தாலும் மற்றொரு பக்கம் ஜஸ்பிரித் பும்ராவின் அச்சுறுத்தலான பந்துவீச்சும் எனக் கூறலாம்.

மேலும் ஜஸ்பிரித் பும்ராவின் பந்தை  ஆடிக்க பலர் தடுமாறி கின்றனர். ஆனால் RCB அணியில் இருக்கும் ஒரு வீரர் மட்டும் அசல்டாக அடித்து ஆடுகிறார் என இந்திய அணியுன் முன்னாள் வீரர் ஒருவர் கூறியுள்ளார். தற்பொழுது ஐபிஎல் 14வது சீசன் இரண்டாவது பாதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்களூரு அணியை சிறப்பாக செயல்பட்டு வருவதாக அந்த அணிசெய்யும் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டன்னுமான கௌதம் கம்பீர். இந்த ஐபிஎல் சீசனில் நிச்சயம் ஆர்சிபி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறினார். மேலும் வீராட்கோலி தலைமையிலான பெங்களூர் அணியுடன் விளையாடும் எந்த ஒரு எதிர் அணியாக இருந்தாலும் சற்று யோசிச்சே ஆடும்.

அதற்கு காரணம்  கோலியுடன் கைகோர்த்து டிவிஎஸ் மேக்ஸ்வெல் போன்ற வீரர்கள் இருப்பதாக கூறினார். சமிபகாலமாக ஆர்சிபி அணியில் சொல்லிக்கொள்ளும்படி பவுலர்கள் இல்லாமல் இருந்து வந்த நிலையில் தற்போது அந்த குறையை போக்கி உள்ளது. அதனால் தான் தற்போது வெற்றியை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது என கூறினார். மேலும் என்னைப்பொறுத்தவரை ஜஸ்பிரித் பும்ரா மிகச் சிறந்த பந்துவீச்சாளர்.

abd
abd

அவரது பவுலிங்கை அடிக்க எதிரணி வீரர்கள் சற்று பயந்து வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் பும்ராவின் பந்தை அடித்து நொறுக்க கூடிய வீரர்கள் வெகு சிலரே இருக்கிறார்கள் அதிலும் இவர் வேற லெவல் அவர் வேறு யாருமல்ல ABD தான் என கூறினார். இவர் ஒருவர் மட்டுமே பும்ராவின் பந்துகளை வெளுத்து வாங்குகிறார் என கோரினார் அவர் இருக்கும் வரை ஆர்சிபி அணியுடன் எந்த அணி மோதினாலும் சற்று பயத்துடன் தான் விளையாடும்.