20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணி வெற்றியை நோக்கி செல்ல பேட்டிங்கில் 4 வது வரிசையில் இந்த வீரர் தான் களமிறங்க வேண்டும் – கம்பீர் காரசராம்.

0

இந்திய அணி 20 ஓவர் உலக கோப்பையை எதிர்நோக்கிய தற்போது காத்து இருக்கிறது. பிசிசிஐ சில தினங்களுக்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவிருக்கும் T20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விளையாட உள்ள 15 பேரை அதிகாரப்பூர்வ வெளியிட்டுள்ளது

பல நல்ல வீரர்களை தேர்வு செய்து உள்ளதால் இந்திய அணி நிச்சயம் கோப்பையை கைப்பற்றும் என பலரும் கூறி வருகின்றனர் ஆனால் ஒருசில கிரிக்கெட் ஆர்வலர்கள் பேட்டிங் ஆர்டரில் சில மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என கூறியுள்ளனர் அந்த வகையில் யார் யார் எந்த இடத்தில் விளையாண்டால் சிறப்பாக இருக்கும் என சில கருத்துகளை கூறிவருகிறனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் கௌதம் கம்பீர் தனது கருத்தை கூறியுள்ளார். ஆரம்பத்தில் அதிரடி வீரர்கள் பலரும் இருந்தாலும் T 20 போட்டி என்பதால் எப்பொழுதுமே அதிரடி இருக்க வேண்டும் அதேசமயம் விக்கெட்டையும் விடகூடாது.

அதற்கு ஏற்றவாறு வீரர்களை செலக்ட் செய்யவேண்டுமென  அந்த வகையில் நான்காவது இடத்திற்கு மிகவும் தகுதியானவர் சூர்யகுமார் யாதவ் தான் அவர் ஒரு கம்ப்ளீட் கிளாஸ் பேட்ஸ்மேன். ஸ்ரேயாஸ் அய்யரை விட இவரிடம் நல்ல திறமை உள்ளது.

சூரியகுமார் அதுவும் ஒரு வெர்சடைல் வீரர் ஏனென்றால் அவரால் வித்தியாசமான பல ஷாட்டுகளில் 20 போட்டியில் ஆட முடியும் ஒவ்வொரு பந்தையும் வெவ்வேறு திசையில் அடிக்கும் திறமை அவரிடம் உள்ளது. இதுதான் இப்பொழுது இருக்கிற கிரிக்கெட்டுக்கு மிகவும் அவசியமான ஒன்று.

surya kumar yadav
surya kumar yadav

மேலும் நீங்கள் மளமளவெனவிக்கெட்டுகள் விழுந்தாலும் ரன் வேட்டையை குறைக்காமல் விக்கெட்டையும் கொடுக்காமல் மிக நேர்த்தியாக விளையாடும் திறமை அவருக்கு இருக்கிறது. என்னைப்பொறுத்தவரை அவரே 4-வது வீரராக T20 போட்டியில் இறக்கினால் இந்தியா நிச்சயம் மிகப்பெரிய ஒரு வெற்றியை ருசிக்க முடியும் அதுவே T20 கிரிக்கெட்டில் நல்ல தாக்கத்தை கொடுக்கும் எனவும் கூறினார்.