ஒவ்வொரு தொலைக்காட்சிகளுக்கும் இடையே பலத்த போட்டி நடைபெறுகிறது சீரியலில் யார் டிஆர்பி யில் முதலிடத்தில் பிடிப்பார்கள் என்பதில் கடும் போட்டி நிலவு வருகிறது அந்த வகையில் சீரியலில் டிஆர்பி யில் அதிக ரேட்டிங் பிடிக்கும் தொலைக்காட்சி என்றால் சன் தொலைக்காட்சிதான்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது அந்த வகையில் சுந்தரி சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் சுந்தரி சீரியல் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் நடிகை கேப்ரியல்லா செல்லஸ். இவர் இந்த தொடர் முடிந்த கையோடு தனது சொந்த ஊருக்கு சென்று விட்டார்.
அதன் பிறகு கர்ப்பமானார் இவருக்கு வளைகாப்பு தன்னுடைய சொந்த ஊரிலேயே கோலாகலமாக நடைபெற்று முடிந்தது இந்த நிலையில் சுந்தரி சீரியல் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள் அது தொடர்பான புகைப்படமும் சமூக வலைதளத்தில் வெளியானது.
இந்த நிலையில் கேப்ரியல்லா தற்பொழுது தனக்கு குழந்தை பிறந்திருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தையும் வெளியிட்டு இதனை கூறியுள்ளார்.
மகளே 5.05.2025
உனது அழுகை எனது வலிக்கும் நிம்மதிக்கும் மருந்தாக்கியவளே…இவ்வுலகம் உனக்கானது மகளே..என்னுடைய அடி மனது நன்றியை @lalithanursinghometrichy தெரிவித்து கொள்கிறேன் சித்ரா அம்மா மருத்துவர்கள் செவிலியர்கள் இன்றி சுக பிரசவம் சாத்தியம் இல்லை,எனது அன்பு கொட்டி குடுக்கும் எனது மக்களின் பிராத்தனைக்கும் உயிர் கலந்த நன்றிகள், இந்த தருணத்திற்காக காத்து கொண்டு இருக்கும் என்னுடைய சகோதரிகள் அனைவருக்கும் இந்த தருணம் அமைய வேண்டும் என்பதை எனது முதல் பிராத்தனையாக இறைவனிடமும் விதியிடமும் வேண்டி கொள்கிறேன். இப்படிக்கு Gabrella