அஜித் படத்தில் நடிக்கும் ஜி. பி. முத்து.? வெளிவந்த புதிய தகவலால் அதிர்ச்சியான ரசிகர்கள்.!

0
ajith-
ajith-

அண்மை காலமாக புதிய செயலி மற்றும் youtube-ன் மூலம் பிரபலமடைந்த பலர் வெள்ளி திரையில் ஈசியாக நுழைந்துள்ளனர் அந்த வகையில் டிக் டாக் மற்றும் youtube -ன் மூலம் பிரபலம் அடைந்தவர் ஜிபி முத்து.

இவர் தற்போது புதிய புதிய பட வாய்ப்புகளை கைப்பற்றி நடித்து வருகிறார் மேலும் சின்ன திரையிலும் பல வாய்ப்புகள் இவருக்கு ஏராளமாக குவிக்கின்றன ஏன் அண்மையில் கூட உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 6 -ல் முதல் போட்டியாளராக உள்ளே நுழைந்தார்.

ஆரம்பத்திலேயே இவருக்கு மக்கள் மற்றும் ரசிகர்கள் நல்ல சப்போர்ட் கொடுத்தனர். ஆனால் தனது குடும்பத்தை பிரிந்து இருந்தது அவருக்கு மிகப்பெரிய ஒரு வருத்தத்தை கொடுத்தது சில நாட்கள் தாக்குப்பிடித்த அவர் ஒரு கட்டத்தில் முடியாமல் கமலிடம் கேட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். வெளியே வந்த அவருக்கு தற்பொழுது ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைத்து இருக்கின்றன.

ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைத்து இருக்கின்றன அதிலும் குறிப்பாக  டாப் நடிகரின் படவாய்பை தட்டி தூக்கி உள்ளார் ஜி பி முத்து. சமீபத்தில்  அவர் சொன்னது அஜித் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்திருப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் ஜி பி முத்து தெரிவித்துள்ளார்.

இதனால் ஜி பி முத்து செம்ம சந்தோஷத்தில் இருக்கிறார் அஜித் ரசிகர்களும் ஜி பி முத்து, அஜித் உடன் நடிக்க போவதை இணையதள பக்கத்தில் வெளியிட்டு பரப்பி வருகின்றனர். அஜித் படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே ஜி பி முத்து  சன்னி லியோனுடன் கைகோர்த்து ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார் இந்த திரைப்படம் வெகு விரைவில் வெளிவர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.