செத்த பயலே.. நார பயலே.. ஜி பி முத்து வாங்கிய புதிய பிரம்மாண்டமான கார்..! விலை மட்டுமே இத்தனை லட்சமா.?

G.P. Muthu New Car : வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் நடிக்கும் நடிகர், நடிகைகளை நாம் எப்படி தூக்கி வைத்து கொண்டாடுகிறோமோ அதே போல youtube, இன்ஸ்டாகிராம் மற்றும் புதுப்புது செயலிகள் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தும் பிரபலங்களையும் நாம் தூக்கி வைத்து கொண்டாடுகிறோம்..

அப்படி  வளர்ந்தவர்கள் தற்பொழுது வெள்ளி திரையில் மாஸ் காட்டுகின்றனர் அப்படிப்பட்ட ஒருவர் தான் ஜி பி முத்து முதலில் டிக் டாக் மூலம்  என்ட்ரி ஆனார் இவருடைய  டயலாக் செத்த பயலே.. நாரா பயலே.. என்று சொல்வது தான்.  அதன் பிறகு இன்ஸ்டாகிராம், youtube சேனல்  ஆரம்பித்து அதில் பிரபலமடைந்தார்.

படிப்படியாக வளர்ந்த இவர் சின்னத்திரையில் குக் வித் கோமாளி மற்றும் ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அசத்தினார் இவருடைய  வெகுளித்தனமான பேச்சுக்கள் ஒவ்வொன்றுமே ரசிகர்கள் மத்தியில் கைத்தட்டல் வாங்கியது இதனால் அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறிய ஜிபி முத்து தற்பொழுது வெள்ளி திரையில் தவிர்க்க முடியாத ஒரு நபராக மாறி உள்ளார்.

அஜித்தின் துணிவு, ஓ எம் ஜி போன்ற படங்களை தொடர்ந்து ஒரு சில புதிய படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஜிபி முத்துவுக்கு சினிமா, youtube  என அனைத்திலும் இருந்து நல்ல காசு வருகிறது. இந்த நிலையில் ஜிபி முத்து புதிய வெள்ளை நிற KIA கார் ஒன்றை வாங்கியுள்ளார். தனது குடும்பத்துடன் ஷோ ரூம்முக்கு சென்று  வாங்கிய வீடியோவை youtube சேனலில் வெளியிட்டார்.

Actor G.P. Muthu
Actor G.P. Muthu

அதனைத் தொடர்ந்து இன்று தனது குலதெய்வ கோயிலுக்கு சென்று முதல் பூஜையை போட்டுவிட்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஆட்டம் போட்டு விட்டு எடுத்த வீடியோ தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. அந்த KIA காரின் விலை 12 முதல் 15 லட்சம் என சொல்லபடுகிறது. இதோ ஜி பி முத்து காருடன் இருக்கும் அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

Actor G.P. Muthu
Actor G.P. Muthu