விஜய் சேதுபதி “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்ததற்காக வாங்கிய முழு சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

vijay sethupathy
vijay sethupathy

நடிகர் விஜய் சேதுபதி அண்மைகாலமாக தேர்ந்தெடுத்து நடித்த திரைப்படங்கள் பெரும்பாலும் தோல்வியை தழுவியது இருப்பினும் சினிமா உலகில் தொடர்ந்து நடித்தார் அந்த வகையில் விக்னேஷ் சிவன் உடன் கைகோர்த்து காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இந்தப்படத்திற்கு எதிர்பார்க்காத அளவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது மேலும் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நயன்தாரா சமந்தா யோகி பாபு மற்றும் பல டாப் நட்சத்திரப் பட்டாளங்கள் இணைந்து நடித்து அசத்தினார்.

இந்த படமும் தற்போது நல்ல வசூலைத் தாண்டியுள்ளதாக படக்குழுவும் சரி இந்த படத்தில் நடித்த டாப் நடிகர் நடிகைகளும் சரி செம கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி பல்வேறு புதிய படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

அதில் ஒன்றாக தற்பொழுது வெளிவரவுள்ள திரைப்படம் தான்  விக்ரம் இந்த படம் வருகின்ற ஜூன் 3ஆம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது அதுவும் கமலுடன் முதல்முறையாக நடித்துள்ளதால் இந்த படத்தை பெரிய அளவில் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில்  காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்காக  நடிகர் விஜய் சேதுபதி எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பார்க்கையில் நடிகர் விஜய் சேதுபதி சுமார் 8 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தெரியவருகிறது. படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது சம்பளத்தை ஏற்றுவதும், இறக்குவாத்துமாக இருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.