Zee tamil serial: தமிழ் சின்னத்திரையில் உள்ள தொலைக்காட்சிகள் அனைத்தும் போட்டி போட்டுக் கொண்டு பல சீரியல்களை புதிதாக அறிமுகப்படுத்தி வருகிறது. அப்படி சன் டிவி ,விஜய் டிவி போன்ற சீரியலுக்கு அடுத்ததாக ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களை ஒளிபரப்பி வரும் தொலைக்காட்சி தான் ஜீ தமிழ்.
ஜீ தமிழில் வருகின்ற ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் இதயம் என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டுள்ளது. இந்த சீரியலில் கதாநாயகியின் கணவன் விபத்தில் சிக்கி மூளை சாவு அடைகிறார் எனவே அவருடைய இதயம் இன்னொரு நபருக்கு கொடுக்குவதற்காக நாயகி போராடுகிறார்
இதுதான் இதயம் சீரியலின் கதை. உண்மை காதலுக்கு எப்பொழுதும் அழிவில்லை என்பதை உணர்த்தும் வகையில் இந்த சீரியலில் இதயமாற்று சிகிச்சையால் உயிர் பிழைக்கும் நபர் நாயகியை பார்க்கும்பொழுது ஏற்படும் ஒரு இனம் புரியாத உணர்வு குறித்த ப்ரோமோவை தற்பொழுது வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறு இந்த சீரியலின் ப்ரோமோ வெளியாகிய சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் இதயம் சீரியலில் கதாநாயகியாக ஜனனி அசோக்குமார் நடிக்க நாயகனாக ரிச்சர்ட் ஜோஸ் என்பவர் நடிக்கிறார். இந்த சீரியலின் கதை கடலூரில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதயம் சீரியலின் கதாநாயகியான ஜனனி அசோக்குமார் இதற்கு முன்பு செம்பருத்தி சீரியலில் இருந்து காரணமே இல்லாமல் விலக்கப்பட்டார். எனவே தற்போது மீண்டும் ஜீ தமிழ் இவருக்கு வாய்ப்பினை கொடுத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
The Wait Is Over…இந்த காதலுக்கு இல்ல End-uh🫰🏻…!!!
இதயம் | ஆகஸ்ட் 28 முதல் | திங்கள் – சனி, மதியம் 1.30 மணிக்கு.#Idhayam #JananiAshokKumar #RichardJose #PuviArasu #NewSerial #ZeeTamilPromo #Promo #ZeeTamil pic.twitter.com/mr62zLVU2Z— Zee Tamil (@ZeeTamil) August 20, 2023