பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகி ஜீ தமிழுக்கு என்ட்ரி கொடுக்கும் முக்கிய பிரபலம்..

Bharathi kannama serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் ஒரு கட்டத்தில் பயங்கர ஹிட்டாக ஓடிக்கொண்டிருந்த சீரியல் தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் முதல் பாகத்தில் அருண் மற்றும் ரோஷினி கதையின் ஹீரோ, ஹீரோயின்களாக நடித்திருந்தனர். இவர்களுக்கு வில்லியாக வெண்பா கேரக்டரில் நடித்திருந்தவர் தான் நடிகை பரீனா.

இவ்வாறு முதல் பாகம் முடிந்த நிலையில் சமீப காலங்களாக இரண்டாவது பாகமும் தொடங்கப்பட்டு அதில் நாயகனாக சிப்பு மற்றும் நாயகியாக வினுஷா தேவி நடித்து வருகின்றனர். இதிலும் வில்லியாக வெண்பா கேரக்டரில் நடித்து வருகிறார் ப்ரீனா. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பு 2வது சீசன்க்கு கிடைக்கவில்லை.

தற்பொழுது தனது அம்மா சௌந்தர்யாவை எதிர்த்து பாரதி கண்ணம்மாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் இதனால் பாரதியை வீட்டிற்குள் சேர்க்காமல் இருந்து வருகிறார் சௌந்தர்யா. ஒரு கட்டத்தில் பாரதியின் மேல் இருக்கும் கோபத்தினால் வெண்பா குடும்பத்தினர்களுக்கு தனது மொத்த சொத்துக்களையும் எழுதிக் கொடுக்கிறார்.

மேலும் கண்ணம்மாவிற்கு தன்னுடைய சின்ன வயதில் பல கஷ்டங்களை கொடுத்த நபர் தான் பாரதியின் அப்பா என்பது தெரியவந்துள்ளது. இவ்வாறு போய்க்கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் வெண்பா கேரக்டரில் நடித்து வரும் ப்ரீனா வேறு ஒரு தொலைக்காட்சிக்கு மாற இருக்கிறாராம். அதோடு பாரதி கண்ணம்மா சீரியலும் விரைவில் முடிய இருப்பதாக கூறப்படுகிறது.

ஏனென்றால், டிஆர்பியில் கொஞ்சம் கூட வரவேற்பு கிடைக்கவில்லை எனவே இந்த சீரியலை நிறுத்த சீரியல் குழு முடிவு எடுத்திருக்கிறது. அந்த வகையில் ஜீ தமிழில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் ரியாலிட்டி ஷோவான டக்கர் டக்கர் என்ற நிகழ்ச்சியில் நடிகை ப்ரீனா மற்றும் ஆர்.ஜே விஜய்  இருவரும் சேர்ந்து தொகுப்பாளர்களாக பணியாற்ற இருக்கிறார்கள் என தகவல் வெளியாகியிருக்கிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment