ஷூட்டிங் ஸ்பாட்டில் லீக்கான பாடல் மேக்கிங் புகைப்படம்!! தாவணியில் அசத்தும் லாஸ்லியா.வைரலாகும் புகைப்படம்

losliya song
losliya song

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம்  பல புதிய முகங்களை அறிமுகப்படுத்தினார்கள். அந்தவகையில் பிக்பாஸ் 3 இல் கலந்துகொண்டடு பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தார் லாஸ்லியா.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு அடுக்கடுக்காக பல பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்தவகையில் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து ப்ரெண்ட்ஷிப் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது நாம் அறிந்த ஒன்று தான் இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர்  இணையதளத்தில் வைரலானது.

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. பிரெண்ட்ஷிப் திரைப்படத்தில் லாஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங், அர்ஜூன், சதீஷ் மற்றும் குக் வித் கோமாளி பிரபலம் பாலா போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

இந்நிலையில் ஹர்பஜன் சிங் சட்டையிலும் லாஸ்லியா பாவாடை தாவணியிலும் இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்தால் அவர்கள் செம குத்தாட்ட பாடலுக்கு டான்ஸ் ஆடி உள்ளார்கள் என்று தெரிகிறது. இதோ அந்த புகைப்படம்.

தற்பொழுது லாஸ்லியா பிக்பாஸ் தர்ஷனுடன் இணைந்து குஞ்சப்பன் திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இப்படத்தின் பூஜை சில நாட்களுக்கு முன்பு நடந்தது.

friendship2
friendship2
friendship
friendship