லாஸ்லியா ஹர்பஜன்சிங் நடிக்கும் ஃப்ரெண்ட்ஷிப் படத்திலிருந்து வெளியான சூப்பர் ஹிட் பாடல்.. வைரலாகும் வீடியோ..

0

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி இதன்மூலம் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கலந்துகொண்டு தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை லாஸ்லியா.  இவர் சினிமாவில் தற்போது கதாநாயகியாக பல திரைப்படங்களில் நடிக்கும் அளவிற்க்கு பிரபலமடைந்துள்ளார் என்றால் அதற்கு தமிழ் ரசிகர்கள்தான் முக்கிய காரணம்.

ஏனென்றால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவிற்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த வகையில் தொடர்ந்து ஹீரோயினாக நடிப்பதற்கு ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி வருகிறார். அந்த வகையில் இந்தியாவின் முன்னாள் சூழல் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவர்களைத் தொடர்ந்து திரைப்படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன், காமெடி நடிகர் சிவா  இவரைத் தொடர்ந்து கலக்கப்போவது யாரு பாலா உள்ளிட்ட இன்னும் பலரும் இத்திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள்.  அதோடு இத்திரைப்படம் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் லாஸ்லியா இவர்கள் இருவருக்கும் தமிழில் தான் இவர்களின் முதல் திரைப்படம்.

லாஸ்லியா மாற்றும் ஹர்பஜன்சிங் இருவருக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பு கிடைக்கும். அதோட இவர்கள் இருவரும் ரசிகர்களின் ஃபேவரட் நடிகர், நடிகைகள். இப்படிப்பட்ட நிலையில் இத்திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் சிங்கிள் ட்ராக் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.