டிடி ரிட்டர்ன்ஸ் படத்திலிருந்து வெளியான பிரெஞ்ச் குத்து பாடல்.! வேற லெவலில் ஆட்டம் போடும் சந்தானம்.!

தமிழ் திரை உலகில் தனது ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் நிறைய திரைப்படங்களில் துணை நடிகராக நடித்து அதன் பின்பு காமெடி நடிகராக நடித்து தற்பொழுது கதாநாயகனாக தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துள்ள நடிகர் தான் சந்தானம்.

இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது இதிலும் குறிப்பாக தில்லுக்கு துட்டு முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் ரசிகர்களிடையே ஏக போக வரவேற்பு பெற்றது திகிலுடன் வெளியான இந்த  திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்தார்கள்.

அதனைத் தொடர்ந்து பார்த்தால் நடிகர் சந்தானம் நடிப்பில் தற்பொழுது பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது இருப்பினும் டிடி ரிட்டர்ன்ஸ் என்ற திரைப்படம் கூடிய சீக்கிரம் வெளியாக இருக்கிறது. மேலும் இந்த திரைப்படமும் சந்தானம் திரை வாழ்கையில் திகிலுடன் கலந்த காமெடி திரைப்படமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.

இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து நடிகை சுரபி கதாநாயகியாக நடித்துள்ளார் மேலும் இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன்,சங்கர்,விஜயன்,மாறன் போன்ற பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இந்நிலையில் இந்த திரைப்படத்திலிருந்து ரசிகர்களுக்கு ஒரு புதிய அப்டேட் வெளியாகியுள்ளது அதாவது இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பிரஞ்ச் குத்து வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த பாடலை ஆப்ரோ மற்றும் கானா முத்து ஆகியவர்கள் பாடியுள்ளார்களாம் இந்த திரைப்படத்தின் பாடல் தற்போது சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருவது மட்டுமல்லாமல் சந்தானம் திரைப்படம் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version