பிரபல நடிகரை சித்தப்பா என அழைத்த பிரன்ஸ் நாயகி.! இதெல்லாம் சிவகார்த்திகேயனின் சித்து விளையாட்டு தான்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் பிரின்ஸ் இந்த திரைப்படம் வருகிற தீபாவளி முன்னிட்டு 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது இதனை தொடர்ந்து இந்த படத்தின் போஸ்டர் மற்றும் ப்ரோமோஷன் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து தற்போது பிரின்ஸ் படத்தின் பிரீ பிரமோசன் விழாவில் கலந்து கொண்டுள்ள பட குழு தங்களின் கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்த விழாவில் கலந்து கொண்ட காமெடி நடிகர் சூரி அவர்கள் மேடையில் ஏறி பேசிக் கொண்டிருக்கும்போது மரியா ஐ லவ் யூ என்று கூறியுள்ளார் அதற்கு மரியா அவர்கள் ஐ லவ் யூ அண்ணா என்று கூறியுள்ளார். கொஞ்சம் காண்டான சூரி ஐ லவ் யூ டார்லிங் என்று சொல்லுங்கள் என கூறியுள்ளார் இதை பார்த்த சிவகார்த்திகேயன் மரியாவிடம் சித்தப்பா என்று கூறுங்கள் என்று உசுப்பேத்தி விட்டார். அதைக் கேட்ட மரியாவும் சூரியை பார்த்து சித்தப்பா என்று கூறியுள்ளார்.

soori
soori

இதனால் காண்டான சூரி சிவகார்த்திகேயனிடம் சென்று உன்னுடன் இருக்கும் போது எந்த ஒரு பொண்ணையும் பார்க்கவிடலை வெளிநாட்டு பெண்ணையாவது கொஞ்சம் பாக்க விடுங்க என்று கூறி உள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர்கள் சிவகார்த்திகேயன் மீது செம்ம கடுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.

siva
siva

இதைத் தொடர்ந்து பிரின்ஸ் திரைப்படம் தீபாவளி அன்று வெளியாக உள்ள நிலையில் அதே தினத்தில் கார்த்தியின் சர்தார் திரைப்படமும் வெளியாக உள்ளது இதனால் இந்த இரண்டு திரைப்படம் ஒன்றுடன் ஒன்று நேரடியாக மோத உள்ளதால் ரசிகர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் இதில் எந்த படம் வெற்றி அடையும் என்று. அது மட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் முதல் முறையாக மோத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment