இலவச டேட்டாவை வழங்கும் ரிலையன்ஸ். ! எத்தனை நாள் தெரியுமா.?

உலக நாடுகளையே இந்த கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது அதே போல் இந்தியாவிலும் கொரோனா மிக வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது, அதனால் மக்கள் பலரும் வீட்டிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் அலுவலக பணிகளை வீட்டிலிருந்தே மேற்கொண்டு வருகிறார்கள் மக்கள் அதனால் மொபைல் சேவை டேட்டா அதிகரித்துள்ளது, இதனை கருத்தில் கொண்டு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வை கடந்த மாதம் இலவசமாக வழங்கியது, இந்த 2ஜிபி டேட்டா இலவச டேட்டா ஜியோ டேட்டா பேக்  திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

இந்த இலவச டேட்டா 2 ஜிபி டேட்டா நான்கு நாட்களுக்கு பொருந்தும் இவை ஏப்ரல் 27ம் தேதியில் இருந்து வாடிக்கையாளர்களின் கணக்கில் சேர்க்கப்பட்டு வருகிறது இந்த ஜியோ இலவச டேட்டாவை பெறுவதற்கு மைஜியோ செயலில் மைபேலன்ஸ் அப்ளிகேஷனை கிளிக் செய்ய வேண்டும், இலவச டேட்டா வழங்கப்படும் தேதி ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் மாறும்.

இலவச டேட்டா வாடிக்கையாளர்களின் பழைய டேட்டா பேக் சலுகை இன்மேல் வழங்கப்படுகிறது அதாவது பயனர் ஏற்கனவே தினமும் 1.5 ஜிபி டேட்டா பயன்படுத்தி வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு மொத்தம் 3.5 ஜிபி டேட்டா ஒரு நாள் ஒன்றுக்கு வழங்கப்படுகிறது, ஜியோ தொடர்ந்து வோடபோன் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு 2 மடங்கு டேட்டாவை வழங்கி வருகிறது.

Leave a Comment

Exit mobile version