3506 கிலோ மீட்டர் பயணம் செய்து ஆராய்ச்சியாளர்களை வியக்கவைத்த நரி. என்ன ஒரு சாதனை

0
fox
fox

நரி ஒன்று 76 நாட்களில் 3 ஆயிரத்து 506 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது அந்த நரி எதற்காக இவ்வளவு தூரம் பயணம் செய்தது என்பதை விரிவாக இங்கே காணலாம்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் நார்வேயின் சோலார் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு பெண் ஆர்க்டிக் நரியின் மீது ஜிபிஎஸ் சாதனத்தை பொருத்திக் நார்வேயின் ஷ்வல்பார்டு தீவில் இருக்கும் ஸ்பிட்ஸ்பெர்கன் பகுதியில் விட்டுள்ளார்.

அந்த நரிக்கு இன்னும் ஒரு வயது கூட நிறைவு பெறவில்லை ஆனால் உணவை தேடி மேற்கை நோக்கி பயணத்தை தொடங்கியது இந்த பயணம் தொடங்கி 21வது நாள் கிரீன்லாந்து அடைந்துள்ளது. ஆயிரத்து 512 கிலோமீட்டர் தூரம் வரை நடந்தே பயணம் சென்றது, அத்துடன் நிற்காமல் தனது அடுத்த பயணத்தை தொடர்ந்து இறுதியாக 26 நாட்களுக்குப் பின் கனடாவின்  தீவிற்கு சென்று அடைந்தது.

இந்த நரி பயணித்த தூரத்தை விடவும் அதன் வேகம் தான் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஏனென்றால் ஒரு நாளைக்கு சுமார் 46 கிலோமீட்டர் தூரம் பயணித்து இருக்கிறது, சில நாட்களுக்குள் 150 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் பயணித்துள்ளது. முதலில் அந்த நரி இறந்து  இருக்கும் அதை யாரோ தான் படகில்  எடுத்து செல்கிறார்கள் என்று நாங்கள் நம்பினோம் ஆனால் அங்கு படகே  இல்லை என்பது தெரியவந்தது நரியின் பயணத்தை கண்டு நாங்கள் அதிர்ந்து போனோம் பின்பு நார்வேயின் பொது ஒலிபரப்பு நிறுவனமான என் ஆர் கே விடம் தெரிவித்தோம்.

இந்தப் பெண்நரியைப் பொறுத்தவரை, சில மாதங்களுக்குமுன் ட்ராக்கர் செயல்பாடு நின்றுள்ளதால், கனடாவில் அது எந்த மாதிரியான சவால்களைச் சந்திக்கப்போகிறது என யாருக்கும் தெரியாது. ஆனால், உணவுப்பழக்கம் தொடங்கி பல விஷயங்களில் மாற்றங்களைக் கொண்டுவந்தால் மட்டுமே அதனால் அங்கு உயிர்பிழைக்க முடியும் என்கின்றனர் இந்த ஆராய்ச்சியாளர்கள்.