பொதுவாக தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்கள் பலரும் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து தன்னுடைய திறமையை வெளிகாட்டி உள்ளார்கள் அந்த வகையில் வில்லனாக நடித்த பல்வேறு நடிகர்களும் தற்போது ஹீரோவாக நடித்து உள்ளார்கள் அதேபோல ஹீரோவாக நடித்த நடிகர்களும் வில்லனாக நடித்து உள்ளார்கள்
இப்படி தன்னுடைய நடிப்பின் மூலமாக ரசிகர்களை கவர்ந்த பல்வேறு மாசான நடிகர்கள் எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் சரி அதில் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள் அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் தங்களுடைய ரசிகர்களுக்கு வித்தியாசமான கதாபாத்திரம் கொடுத்தால் அவர்களுக்கு பிடிக்கும் என்ற ஆசையில்தான்.
அந்த வகையில் பல்வேறு நடிகர்கள் பெண் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்து உள்ளார்கள். அந்த வகையில் ரஜினி கமல் விஜய் என பல்வேறு நடிகர்களும் பெண் வேடத்தில் திரைப்படங்களில் நடித்துள்ளார்கள்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் என்ற பாடலில் பெண் வேடத்தில் நடித்திருப்பார் அதேபோல கமலஹாசன் அவ்வை சண்முகி என்ற திரைப்படத்தில் முழு பெண்ணாகவே நடித்திருப்பார்.
இந்நிலையில் இதுவரை பெண் கதாபாத்திரத்தில் ஏற்று நடிக்காத நடிகர்களும் தமிழ் சினிமாவில் உள்ளார்கள் அந்தவகையில் தியாகராஜ பாகவதர், சின்னப்பா, எம்ஜிஆர், அஜித் போன்ற நடிகர்கள் இதுவரை பெண் வேடத்தில் நடித்தது கிடையாது.
இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் இவர்கள் அனைவரும் திரைப்படங்களில் ஹீரோவாக பல்வேறு திரைப்படத்தில் நடித்து விட்டார்கள் அந்த வகையில் இவருடைய ரசிகர்கள் இது போன்ற கதாபாத்திரத்தில் நடித்தால் அவர்களுக்கு பிடிக்காது என்ற காரணத்தினால் தான் இப்படி நடிக்கவில்லை.


