பழைய நினைவுகளை மறக்க.. சமந்தா எடுத்துள்ள புதிய ஆயுதம் என்ன தெரியுமா.? லீக்கான புகைப்படம்.!

0
samantha
samantha

நடிகை சமந்தா தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தனது மார்க்கெட்டை பெரிய அளவில் உயர்த்திக் கொண்டு வலம் வருகிறார். இதன் மூலம் அவரது சம்பளத்தையும் தற்போது பல மடங்கு உயர்த்தி நடித்து வருகிறார். இப்படி சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வந்த சமந்தா.

2017 ஆம் ஆண்டு தெலுங்கு முன்னணி நடிகர் நாக சைதன்யாவை காதலித்து இருவரும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் சில வருடங்கள் தங்களது வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிகிறோம் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.

இதைக் கேட்ட அவரது ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். இருந்தாலும் இவர்கள் இருவரும் தற்போது பிரிந்துவாழ்ந்து வருகின்றனர். விவாகரத்திற்கு பிறகு சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவருமே அவர்களது படத்தில் கவனம் செலுத்தி வருகின்றன. அதிலும் குறிப்பாக சமந்தா விவாகரத்திற்கு பிறகு பல படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார். இந்த நிலையில் அண்மையில் காபி வித் கரண் என்ற நிகழ்ச்சியில் சமந்தா கலந்து கொண்டார்.

அப்போது அவர் விவாகரத்து குறித்து பேசினார். இது குறித்து எந்த ஒரு புகாரும் நான் கொடுக்கவில்லை ஏனென்றால் இது நானே தேர்ந்தெடுத்த வாழ்க்கை. பிரியும் போது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது தற்போது மிக வலிமையாக இருக்கிறேன் என்று சமந்தா பேசியுள்ளார். அவரைத் தொடர்ந்து நாக சைதன்யாவும் ஒரு பேட்டியில் பேசியது தற்போது தான் எனது குடும்பத்துடன் பல மணி நேரம் செலவழிக்கிறேன் மேலும் நெருங்கிய நண்பர்களுடனும் மனம் விட்டு பேசி வருகிறேன் இப்போதுதான் மகிழ்ச்சியாக இருப்பது போல் பேசி உள்ளார்.

இந்த நிலையில் சமந்தா மும்பை விமான நிலையத்தில் சாதாரண உடலில் கையில் ஒரு புக் உடன் வந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. சமந்தாவின் கையில் காயப்பட்ட மனதை எப்படி தெத்துவது என்பது தொடர்பான புத்தகத்தை வைத்துள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் இப்படித்தான் உங்கள் மனதை தேற்றி வருகிறீர்களா என கமெண்ட் எழுப்பி வருகின்றனர்.

samantha
samantha