சின்னத்திரை வரலாற்றிலேயே முதன் முறையாக 100 கோடி கொடுத்து பிரபல படத்தை வாங்கிய தொலைக்காட்சி நிறுவனம்.! அட இவர் படம்னா சும்மாவா…?

தமிழ் சினிமாவை பொருத்தவரை ஒரு திரைப்படம் திரைக்கு வருகிறது என்றால் அந்த திரைப்படம் எவ்வளவு வசூல் செய்கிறது அதன் சாட்டிலைட் உரிமம் எவ்வளவுக்கு சென்றது என தெரிந்துகொள்ள பல ரசிகர்கள் ஆவலுடன் இருப்பார்கள் அது மட்டும் இல்லாமல் எந்த தொலைக்காட்சி நிறுவனம் புதிய திரைப்படத்தை வாங்கியுள்ளது என்பதை தெரிந்து கொள்ளவும் ஆவலுடன் இருப்பார்கள்.

சமீபகாலமாக தொலைக்காட்சிகளுக்கு இடையே பலத்த போட்டி நடைபெறுகிறது எந்த ஒரு புது திரைப்படம் வந்தாலும் அதனை வாங்குவதற்கு போட்டி போட்டுக் கொண்டு தொலைக்காட்சி நிறுவனங்கள் முதல் நிலையில் இருக்கிறது. அதிலும் புது படத்தின் சாட்டிலைட் உரிமை எத்தனை கோடிக்கு விற்கப்பட்டது? எந்த தொலைக்காட்சி நிறுவனம் வாங்கியது என தெரிந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இதுவரை முன்னணி நடிகர்களின் திரைப்படங்களின் சாட்டிலைட் உரிமம் இதுவரை சுமார் 60 முதல் 70 கோடி வரை மட்டுமே விற்கப்பட்டுள்ளது. அதேபோல் இதுவரை எந்த ஒரு முன்னணி நடிகரின் திரைப்படமும் 100 கோடியை எட்டியதே கிடையாது ஆனால் ஒரே ஒரு நடிகருக்கு மட்டும் நூறு கோடி கொடுத்து சாட்டிலைட் உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது.

அது யார் திரைப்படம் என்று உங்களுக்கே தெரியும் அதாவது கடந்த 2018 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய 2.0 என்ற திரைப்படத்தை தான் ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் 100 கோடிக்கு மேல் கொடுத்து அதன் சேட்டிலைட் உரிமையை கைப்பற்றியது. ரஜினியின் 2.0 திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தை சங்கர் அவர்கள் தான் இயக்கியிருந்தார்.

சங்கர் திரைப்படம் என்றாலே பிரமாண்ட திரைப்படம் ஆக அமையும் அந்த வகையில் இந்த திரைப்படமும் பிரம்மாண்டமாக அமைந்தது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் இயக்குனர் ஷங்கர் ஜி. விருது விழாவில் ரஜினி நடிப்பில் வெளியாகிய 2.0 திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை பல கோடி கொடுத்து வாங்கியதை வெளிப்படையாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment