ரஜினியின் “அண்ணாத்த” படம் குறித்து முதல் முறையாக வாய் திறந்த டி. இமான் – கொண்டாடும் ரசிகர்கள்

0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபகாலமாக ஆக்சன் திரைப்படத்தில் நடித்து வந்த நிலையில் பல வருடங்கள் கழித்து சிறுத்தை சிவாவுடன் கைகோர்த்து கிராமத்து கதையில் நடித்துள்ளதால் ரஜினி செம்ம சந்தோஷத்தில் இருக்கிறார். இதனால் அண்ணாத்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

இந்த படம் வருகின்ற தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4 ஆம் தேதி வெளியாக இருக்கிறது இந்த படமும் USA வில் மட்டும் 300 தியேட்டர்களில் வெளியாக இருக்கிறதாம் அங்கேயே இப்படி என்றால் அப்ப தமிழ்நாட்டில் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் பெரும்பாலான தியேட்டர்களை தற்போது கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.

இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, யோகி பாபு, சூரி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க வேற லெவெலில்படம் எடுக்கப்பட்டுள்ளதாக ஆரம்பத்திலேயே கூறப்பட்டது இந்த திரைப்படத்தை மிகப் பெரிய பணச்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் எடுத்துள்ளது.

கிராமத்து கதை என்றாலே டி இமான் தான் இசையமைப்பது வழக்கம் அந்த வகையில் இந்தப் படத்திற்கும் அவர் இசையமைத்து உள்ளார். இன்று தேசிய விருதை பெற்றார் டி இமான் வெளியே வந்தபொழுது செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் அண்ணாத்த எப்படிப்பட்ட படம் என கேட்டனர்.

அதற்கு அவர் மக்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடும் ஒரு கமர்சியல் படமாக தான் அண்ணாத்த படம் இருக்கும் என அவர் கூறியுள்ளார் இவ்வாறு சொன்ன செய்தி தற்போது இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருவதோடு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.