விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து “ஏஜெண்ட் டினாவுக்கு” அடித்த மிகப்பெரிய ஜாக்பாட் – மற்றோரு சூப்பர் ஸ்டாரின் படத்தில் இணைந்தார்.?

உலக நாயகன் கமலஹாசன் தொடர்ந்து வருடத்திற்கு ஒரு தரமான படங்களை கொடுத்து வந்த நிலையில் இடையில் அரசியல், தொழில் நிறுவனங்கள், வியாபாரம், சின்னத்திரை போன்ற பலவற்றிலும் கவனம் செலுத்தி வந்ததால் அவரால் தொடர்ந்து படங்களில் நடிக்க முடியவில்லை.

பின்பு சில வருடங்கள் கழித்து லோகேஷ் கனகராஜ் சொன்ன கதை கமலுக்கு ரொம்ப பிடித்த போக விக்ரம் என்னும் படம் உருவாகியது. இந்த படத்தில் கமல் ஹீரோவாக நடித்திருந்தார் மற்றும் அவரே தயாரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து நல்ல வசூலை அள்ளியது.

மற்றும் விக்ரம் படம் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார் அவருக்கு இந்த படம் ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது. இந்த படத்தில் கமலுடன் இணைந்து சூர்யா, விஜய் சேதுபதி, நரேன், பகத் பாசில், ஏஜென்ட் டினா போன்ற பல முக்கிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டது. அப்படி ஒரு கதாபாத்திரம் தான் ஏஜென்ட் டினா. நடிகை வசந்தி என்பவர் விக்ரம் படத்தில் ஏஜென்ட் டினா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் விக்ரம் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்திருந்தாலும் இவர் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டன மற்றும் தற்போது இவருக்கு பல பட வாய்ப்புகளும் வந்த வண்ணம் இருக்கிறதாம்.

இந்த நிலையில் தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிப்பில் உருவாகி வரும் Christopher படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஏஜென்ட் டினா நடித்து வருகிறாராம். அந்த படத்தின் சூட்டிங் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment