தற்பொழுது எல்லாம் தமிழ் சினிமாவில் ஒளிபரப்பாகி வரும் திரைப்படங்கள் எந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறதோ அதே போல் மற்ற தெலுங்கு, ஹிந்தி போன்ற திரைப்படங்களுக்கும் தமிழ் ரசிகர்கள் தங்களது நல்ல வரவேற்பை தந்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த இரண்டு வருடங்களாக தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களையும் அதிர வைத்து வரும் திரைப்படங்கள் தான் பீஸ்ட் மற்றும் கேஜிஃப் 2.
கேஜிஃப் வேறு மொழி திரைப்படமாக இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் தங்களது நல்ல ஆதரவை அளித்திருந்தார்கள். ஏனென்றால் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தை விடவும் கேஜிஃப் அதிகபடியன வசூலைப் பெற்றுள்ளது. இவ்வாறு போய்க்கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது இந்த வாரம் 3 புதிய தமிழ் திரைப்படங்கள் வெளியாக உள்ளது.
இந்த திரைப்படங்கள் எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதியும்,யாஷ் நடித்த திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளையும் இந்த இரண்டு படங்களும் ஆக்கிரமித்ததால் எந்த திரைப்படங்களையும் கடந்த இரண்டு வாரங்களாக ரிலீசாகவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் ஏப்ரல் 28ஆம் தேதி முன்று திரைப்படங்கள் வெளியாகி உள்ளது.முதலாவதாக தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர் நடிகைகளான விஜய்சேதுபதி, நயன்தாரா சமந்தா ஆகியோர்களின் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.

இத்திரைப்படத்திற்க்கு தான் முதல் முக்கியத்துவம் தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனை தொடர்ந்து அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் நடித்த ஹாஸ்டல் திரைப்படம் நல்ல எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. கதையம்சம் கொண்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பிறகு மூன்றாவதாக சந்தோஷ் பிரதாப் நடித்த கதிர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது இத்திரைப்படத்தின் டீசரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து இருந்தது.