தனுஷை தொடர்ந்து பிரபல வாரிசு நடிகருடன் இணைய போகும் கார்த்திக் நரேன்.? அந்த ஹீரோ யார் தெரியுமா.?

0

தமிழ் சினிமாவில் சமீப காலமாக புதுமுக இயக்குனர்கள் சிறந்த படங்களை கொடுத்து டாப் நடிகர்களின் கவனத்தை திரும்புகின்றனர் அந்த வகையில் துருவங்கள் பதினாறு என்னும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் இயக்குனர் கார்த்திக் நரேன்.

அதுவும் இந்த திரைப்படத்தை குறைந்த நாட்களிலேயே பெரிய செலவு இல்லாமல் முடிந்ததால் தயாரிப்பாளர்களுக்கும் மற்றும் நடிகர்களுக்கும் பிடித்துப்போன ஒரு இயக்குனராக மாறினார். இவர் எடுத்த பெரும்பாலான திரைப்படங்கள் குறைந்த நாட்களிலேயே எடுக்கப்பட்ட திரைப்படங்களாக தான் இருந்து வந்துள்ளன.

அந்த வகையில் துருவங்கள் பதினாறு திரைப்படத்தை தொடர்ந்து அவர் நடிகர் அருண்விஜய், பிரசன்னாவை வைத்து மாஃபியா சப்டர் 1 என்ற திரைப்படத்தை எடுத்திருந்தார் இந்த திரைப்படமும் ஓரளவு நல்ல வரவேற்பை அதன் பின் தற்போது தனுஷை வைத்து “மாறன்” என்ற திரைப்படத்தை எடுத்து உள்ளார். சமீப காலமாக மிகப்பெரிய அளவில் கார்த்திக் நரேன் படங்கள்  அளவில் வெற்றி பெறவில்லை.

என்றாலும் தனுஷ் கதையை சொல்லி ஓகே செய்து இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. தனுஷ் ஒருவர் மீது நம்பிக்கை வைத்திருந்தால் மட்டுமே படத்தைக் கொடுப்பார் அப்படி இந்த படத்தை கொடுத்துள்ளது அவர் மீது திறமை இருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக தெரியவருகிறது. இந்த திரைப்படம் வெகுவிரைவிலேயே வெளியாக இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் கார்த்திக் நரேன் வாரிசு நடிகரின் ஒருவரின் படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

அவர் வேறு யாருமல்ல முரளியின் மகன் அதர்வா தான் என சொல்லப்படுகிறது. கார்த்திக் நரேன் தற்போது ஒரு கதையை சொல்லியே எடுத்து சொல்லி உள்ளார். தற்போது முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது வெகுவிரைவிலேயே இவர்கள் இருவரும் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.