தனுஷ், சூர்யாவை தொடர்ந்து அடுத்ததாக பெரிய நடிகருக்கு கொக்கி போட்ட இயக்குனர் வெற்றிமாறன்.! சிக்கினது யார் தெரியுமா.? வைரல் நியூஸ் இதோ.

0

இயக்குனர் வெற்றிமாறன் வருடத்திற்கு ஒரு படங்களையாவது கொடுத்து வருவது வழக்கம் அப்படி வெளிவரும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிப்பதால் தற்போது அசுர வளர்ச்சியை எட்டி உள்ளார்.

இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த அசுரன் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சூரியை வைத்து விடுதலை என்ற பெயரில் ஒரு படத்தை எடுத்து வருகிறார்.

இந்த திரைப்படமும் வெற்றிமாறன் ஒரு சூப்பர்ஹிட் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து சூர்யாவுடன் வாடி வாசல் என்ற திரைப்படத்தை எடுக்கவுள்ளார்.

அதன்பிறகு  யாருடன் கூட்டணி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் அதிகபட்சமாக உலக நாயகன் கமலுடன் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனங்களுடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்த ப்பட்டு வருவதாகவும் கூறிப்படுகிறது.

இந்த கூட்டணி திரை உலகில் இணைந்து பணியாற்ற உள்ளதால் இந்திய சினிமா உலகமே இந்த படத்தை மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கும் மேலும் இவர்கள் இருவரும் முதல் முறையாக இணைய உள்ளதால் பொதுமக்களும் ரசிகர்களும் பெரும் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.