ஐந்து வருடங்கள் கழித்து செம்பருத்தி சீரியல் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை.! அட, இவர் மகாபாரதத்துல நடிச்சவராசே.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அனைத்து சீரியல்களுக்கும் எப்பொழுதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.அந்த வகையில் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த வெற்றிப்பெற்ற சீரியல்தான் கனா காணும் காலங்கள். இந்த சீரியலின் மூலம் பிரபலமடைந்து சின்னத்திரைக்கு அறிமுகமானவர்தான் நடிகை நிஷா கிருஷ்ணன்.

இந்த சீரியலின் மூலம் பிரபலமடைந்த இவருக்கு மீண்டும் சரவணன் மீனாட்சி தொடரில் முக்கிய வேடத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது இதிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதனை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மகாபாரதம் தொடரில் திரௌபதி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பரிட்சையமான நடிகையாக மாறினார்.

இதனைத் தொடர்ந்து தொகுப்பாளராகவும் பணியாற்றி வந்த இவர் சன் டிவியில் ஒளிபரப்பான பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.  பிறகு ஜீ தமிழ் ஒளிபரப்பாகி வந்த தலையணை பூக்கள் சீரியல் ஹீரோயினாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.இந்த சீரியலில் குடும்ப பெண்ணாக நடித்து ஒட்டுமொத்த தமிழர்களையும் கவர்ந்தார்.

இவ்வாறு பிரபலமடைந்த இவருக்கு வெள்ளித்திரையிலும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அந்தவகையில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த நான் சிவப்பு மனிதன்,இவன் வேற மாதிரி உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு நடிகர் கணேஷ் வெங்கடேசனை திருமணம் செய்து கொண்டார். சில வருடங்கள் கழித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நெஞ்சம் மறப்பதில்லை தொடரின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.  சீரியலில் இவரின் கேரக்டர் இவருக்குப் பிடிக்கவில்லை என்பதால் பாதியிலேயே சீரியலில் இருந்து விலகினார் தற்போது இவர் புதிய சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது ஜீ தமிழ் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் பெற்ற செம்பருத்தி சீரியலில் நடித்து வருகிறார். ஷபானா இந்த தொடரில் ஹீரோயினாக நடித்துள்ளார் என்பது நாம் அறிந்த ஒன்று தான், மேலும் பிரியா ராமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இந்நிலையில் தற்போது செம்பருத்தி இணைந்துள்ளார். கிட்டத்தட்ட 5 வருடங்கள் கழித்து மீண்டும் சீரியலில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் நடித்துள்ள செம்பருத்தி சீரியலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

https://youtu.be/fUhiohTJREE

Leave a Comment