விக்ரம் படத்தில் ஐந்து பாடல்கலா .! திடிரென லிஸ்டை வெளியிட்ட அனிருத்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது வெளியாகவுள்ள திரைப்படம் விக்ரம் இந்த திரைப்படத்தில் கமல், விஜய் சேதுபதி, பசுத் பாஸில்  ஆகியோர் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஜூன் 3ம் தேதி வெளியாக உள்ளது என அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் விக்ரம் இத்திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.அப்போது இந்த படத்தில் சூர்யாவும் உள்ளார் என்ற தகவலை லோகேஷ் கூறியுள்ளர்.அதுமட்டுமல்லாமல் இந்த பத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்த திரைப்படத்திற்கு இசை அமைப்பாளர் அனிருத் அவர்கள் இசை அமைத்துள்ளார். மேலும் அனிருத் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் எத்தனை பாடல்கள் உள்ளது என்ற லிஸ்டை வெளியிட்டுள்ளார். இந்த லிஸ்ட் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

விக்ரம் படத்தில் பத்தல பத்தல என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து அனிருத் வெளியிட்ட  ஸ்டில் முதல் பாடலாக பத்தல பத்தல, அதன்பின்னர் விக்ரம் டைட்டில் ட்ராக், வேஸ்டட், போர்கொண்ட சிங்கம், ஒன்ஸ் அப்பான் ஏ டைம், ஆகிய ஐந்து பாடல்கள் விக்ரம் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது.

இதற்கு முன்னதாகவே பத்தல பத்தல பாட்டு பாடல் வெளியது அதில் அரசியல் கருத்து இருப்பதாக  கமலை விமர்சிக்கின்றனர் என்ற சர்ச்சையையும் ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் கமல் மீது புகார் அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Comment