உனக்கு குறஞ்ச்சவ நான் இல்லை..! ரம்யா கிருஷ்ணனையே தூக்கி சாப்பிட்ட அனுஷ்காவின் ஐந்து திரைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் அழகிலும் நடிப்பிலும் ஏன் உயரத்திலும் சிறந்த நடிகை என்றால் அவர் அனுஷ்கா தான் அந்த வகையில் அனுஷ்கா திரைக்கு வந்த புதிதில் இவருடைய உயரத்தை பார்த்து உயரம் உள்ள கதாநாயகனுக்கு மட்டும்தான் இவர் சரியாக வருவார் என்று நினைத்த நிலையில் அந்த எண்ணத்தை ரசிகர்களின் மனதில் அடியோடு பிடுங்கி எடுத்த நடிகை என்று சொல்லலாம்.

அந்த வகையில் நடிகை அனுஷ்கா அவர்கள் தமிழ் சினிமாவில் மாதவன் நடிப்பில் வெளியான 2 என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற மொபைலா என்ற பாடலில் இவரை கண்டு ஜோல்லு விடாத ரசிகர்களே கிடையாது அந்த வகையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த திரைப்படமாக சஸ்பென்ஸ் மற்றும் திரைப்படமாக வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் என்றால் அவை அருந்ததி திரைப்படம் தான்.

அந்த வகையில் அனுஷ்கா நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த ஐந்து சூப்பர் ஹிட் திரைப்படத்தை பற்றி பார்க்கலாம்.

அருந்ததி திரைப்படம் இந்த திரைப்படம் அனுஷ்காவின் சினிமா வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் என்றே சொல்லலாம் அந்த வகையில் இந்த திரைப்படத்தில் நடிகை அனுஷ்காவின் நடிப்பு மிக பிரம்மாண்டமாக இருந்தது மட்டும் இல்லாமல் இவர் வில்லனுக்கு ஈடு கொடுக்கும் அளவிற்கு இந்த திரைப்படத்தில் தன்னுடைய நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்.

சிங்கம் திரைப்படம் ஆனது சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ஆகும் இதில் கதாநாயகியாக நடிகை அனுஷ்கா நடித்திருப்பார் மேலும் இந்த திரைப்படத்தை இயக்குனர் ஹரி அவர்கள் இயக்கியது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படம் சுமார் மூன்று பாகங்களாக வெளியாகி மாபெரும் வெற்றி கண்டது. மேலும் இந்த திரைப்படத்தில் சூர்யா மிகவும் குள்ளமாக இருந்தாலும் அவற்றை தெரியாதபடி இந்த திரைப்படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டு எடுக்கப்பட்டிருந்தது.

தெய்வத்திருமகள் என்ற திரைப்படம் தமிழில் ஒரு மாபெரும் வெற்றி திரைப்படம் ஆக அமைந்தது இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் கதாநாயகனாக நடித்திருப்பார் மேலும் இதில் வக்கீல் என்ற கதாபாத்திரத்தில் நடிகை அனுஷ்கா நடித்த கதாபாத்திரம் மிகவும் சிறப்பு மிக்க கதாபாத்திரமாக அமைந்தது.

என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடிகை அனுஷ்கா அஜித்துக்கு ஜோடியாக நடித்திருப்பார் அதில் இவர் நடித்த தேன்மொழி என்ற கதாபாத்திரம் மிகவும் பிரமாண்டமாக அமைந்தது மட்டுமில்லாமல் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

கடைசியாக இவருடைய நடிப்பில் பாகுபலி என்ற திரைப்படம் வெளியாக்கியது இந்த திரைப்படத்தில் நமது நடிகை தேவசேனா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் அதேபோல இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் ராஜமாதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் ரம்யா கிருஷ்ணனுக்கு நான் பஞ்சம் கிடையாது என்பது போல் இந்த திரைப்படத்தில் தன்னுடைய தத்துரூபமான நடிப்பை மிகச் சிறப்பாக வெளிக்காட்டி இருப்பார்.

Leave a Comment