இளவரசி வேடத்தில் தமிழ் சினிமாவையே ஆட்டிப்படைத்த ஐந்து நாயகிகள்..! இதுல இவுங்க நடிப்ப மட்டும் மறக்கவே முடியாது..!

தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் வரலாற்று திரைப்படங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது அந்த வகையில் செம்ம மாஸ் ஆன திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருந்தாலும் வரலாற்று திரைப்படத்திற்கு ரசிகர்கள் எப்பொழுதும் பெரும் அளவு வரவேற்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் இளவரசி கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களை கவர்ந்த நடிகைகளை பற்றி பார்க்கலாம் வாங்க.

நடிகை நயன்தாரா இவர் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவ்வாறு பிரபலமான நமது நடிகை பல்வேறு சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பது மட்டுமில்லாமல் காஷ்மோரா திரைப்படத்தில் நடித்த அந்த இளவரசி கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

2016 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா ரத்தின மகாதேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் அவருக்கு ராணி கதாபாத்திரம் மிகவும் பிரம்மாண்டமாக இருப்பது மட்டுமில்லாமல் அவர் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது.

நடிகை அனுஷ்கா இவர் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறவர் அந்த வகையில் இவர் பாகுபலி திரைப்படத்தில் தேவசேனா எனும் கதாபாத்திரத்தில் இளவரசையாக நடித்திருப்பார் இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படத்தின் மூலம் அவர் ஏகப்பட்ட வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமாகிவிட்டார்.

நடிகை திரிஷா சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் குந்தவை என்ற கதாபாத்திரத்தில் இளவரசையாக நடித்திருப்பார் அது மட்டும் இல்லாமல் இவருடைய தோற்றம் இந்த திரைப்படத்தில் சோழ குல பெண்களுக்கு ஊறிய வகையில் மிகவும் அற்புதமாக இருந்ததன் காரணமாக ரசிகர்கள் இவரை பார்த்து அசந்து விட்டார்கள் என்றே சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் தற்போது வயது முதிர்ந்தும் இன்னும் அதே அழகில் பொலிவுடன் தான் திரிஷா இருக்கிறார்.

நடிகை ஐஸ்வர்யா ராய் இவர் பாலிவுட்டில் மிக பிரம்மாண்டமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அந்த வகையில் இவர் சமீபத்தில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் மிகவும் பிரமாண்டமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார் அதாவது இந்த திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

கீர்த்தி சுரேஷ் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சமந்தா ஆகியோர்கள் நடிப்பில் வெளியான சீமராஜா என்ற திரைப்படத்தில் பிளாஷ்பேக் கட்சியில் ராஜாவாக இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு கீர்த்தி சுரேஷ் அவர்கள் கதாநாயகியாக நடித்திருப்பார் என்று சொல்லலாம்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment