முதல் படமே மரண ஹீட் கொடுத்த ஐந்து நடிகைகள்.! ஒன்னு ஒன்னும் நின்னு பேசும்…

சினிமாவில் பல நடிகைகள்  தங்களுடைய முதல் படமே தோல்வி படங்களாக அமைந்து சினிமாவில் பல நடிகைகள் காணாமல் போயிருக்கிறார்கள். ஆனால் ஒரு சில நடிகைகள் தோல்வி படங்களாக இருந்தாலும் சினிமாவில் தற்போது வரையிலும் ஜொலித்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து மேலும் சில நடிகைகள் தங்களுடைய முதல் படத்தை வெற்றி படமாக கொடுத்து சினிமாவில் ஜொலித்து வந்த ஐந்து நடிகைகளை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

கிரண்:- இவர் தற்போது பட வாய்ப்பு எதுவும் அமையாததால் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் அறிமுகமான முதல் படமான ஜெமினி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதன் பிறகு சில திரைப்படங்களில் நடித்தார் தற்போது பட வாய்ப்பு எதுவும் இல்லாததால் சமுக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கிறார்.

ரீமா சென் :- இவருடைய முதல் படம் மின்னலே இந்த திரைப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார் இவருக்கும் இதுதான் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படமும் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது.

கேத்தரின் தெரேசா:- இவர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று இருக்கிறது.

மீரா ஜாஸ்மின்:- இவருடைய முதல் படமான சண்டக்கோழி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. அதன் பிறகு சில திரைப்படங்களில் நடித்து வந்த மீரா ஜாஸ்மின் பட வாய்ப்பு எதுவும் அமையாததால் தற்போது சினிமாவை விட்டு விலகி இருக்கிறார். இருந்தாலும் இவருடைய முதல் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று இருக்கிறது. இவர் மட்டுமல்லாமல் நடிகர் விஷாலுக்கும் சண்டக்கோழி திரைப்படம் தான் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ரித்திகா சிங்:- இவர் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் இவர் அறிமுகமான முதல் படமே மிக பெரிய அளவில் வெற்றி பெற்று இருக்கிறது.

இப்படி தங்களுடைய முதல் திரைப்படத்தை வெற்றி படமாக கொடுத்துவிட்டு தற்போது சினிமாவில் வாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த ஐந்து நடிகைகளும்.

Leave a Comment