கம்பீரத்தை துளி கூட விட்டுக் கொடுக்காமல் நடித்த ஐந்து நடிகர்கள்..! அதிலும் ரெங்கன் வாத்தியார் வேற லெவல்..!

பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்றால் கண்டிப்பாக நடிகர்கள் நடிகைகள் மட்டும் இன்றி அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற குணசித்திர வேடங்களும் முக்கிய பங்கு வருகிறது இந்நிலையில் தமிழ் திரைப்படங்களில் தன்னுடைய கம்பீரத்தை விட்டுக் கொடுக்காமல் திரைப்படத்தில் மிரட்டிய ஐந்து நடிகர்களை பற்றி பார்க்கலாம் வாங்க

வேலா ராமமூர்த்தி இவர் கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களில் பெரும் அளவு நடித்துள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவருக்கு என தனி ரசிகர் கூட்டம் உள்ளது இவர் கொம்பன் படத்தில் துரைப்பாண்டி மற்றும் என் ஜி கே படத்தில் சகாயம் அதேபோல புலிக்கொத்து பாண்டி திரைப்படத்தில் சன்னாசி தேவர் போன்ற கதாபாத்திரத்தில் நடித்த கம்பீரமாக தன்னுடைய நடிப்பு திறனை வெளி காட்டி இருப்பார்.

ராஜ்கிரன் இவர் தமிழில் சுமார் 25 திரைப்படத்திற்கு மேலாக நடித்துள்ளார் அந்த வகையில் தற்பொழுது இவர் பெரும்பாலும் குணச்சித்திர வேடங்களில் மிகவும் கம்பீரமாக நடித்து வருவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் அந்த வகையில் இவர் நடித்த கொம்பன், ரஜினி முருகன், பா பாண்டி, சண்டக்கோழி போன்ற திரைப்படங்கள் இவருடைய நடிப்புக்கு உதாரணமாக அமைந்துள்ளது.

ஹரிஷ் உத்தமன் இவர் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டும் இன்றி தெலுங்கு மலையாளம் போன்ற பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கிறார் அந்த வகையில் இவர் நடித்த பாண்டியநாடு, கௌரவம், மிகாமன் போன்ற திரைப்படங்களில் மிக சிறப்பாக நடித்திருப்பார்.

கிஷோர் குமார் இவர் தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் அதுமட்டுமில்லாமல் இவர் வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த புகழ் பெற்றவர் அதன்பிறகு விசாரணை, ஆடுகளம், வடசென்னை போன்ற பல திரைப்படத்தில் நடித்தது மட்டும் இல்லாமல் சமீபத்தில் பேட்டை காளி  வெப்தொடரில் இவருடைய கதாபாத்திரம் ரசிக்க கூடியதாக அமைந்துள்ளது

பசுபதி இவர் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் போன்ற பல்வேறு வித்தியாசம் நிறைந்த திரைப்படங்களில் வில்லனாகவும் குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்த புகழ் பெற்றுள்ளார் அந்த வகையில் இவர் நடித்த சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் குத்து சண்டை பயிற்சியாளராக நடித்த கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த பொய் விட்டது மேலும் இதில் இவருடைய கம்பீரம் துளி கூட குறையாமல் கெத்து காட்டி நடித்திருப்பார்.

Leave a Comment

Exit mobile version