முதல் வார முடிவில் நம்பர் ஒன் யார்.? துணி.. வாரிசா.. தமிழ்நாடு வசூல் நிலவரம்

0
ajith and vijay
ajith and vijay

ரஜினி, கமலை தொடர்ந்து அஜித், விஜய்.. தொடர்ந்து படங்களின் மூலம் மோதிக் கொள்கின்றனர். அதை அஜிதோ வெளிப்படையாகவே சொல்லி உள்ளார் விஜய்க்கும் எனக்கும் சினிமா உலகில் போட்டிகள் நடந்து கொண்டிருக்கிறது என்று.. பல தடவை இருவரும் நேருக்கு நேர் மோதி உள்ளனர்.

அதில் விஜய் கைதான் பெரிதும் ஓங்கி இருந்தது இருப்பினும் அஜித் விடுவதாக இல்லை தொடர்ந்து விஜய் உடன் மோதிக்கொண்டே இருக்கிறார் அந்த வகையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு  இந்த பொங்கலை முன்னிட்டு அஜித்தின் துணிவு, விஜயின் வாரிசு திரைப்படங்கள் களம் இறங்கின.

இதனால் இந்த பொங்கல் ரசிகர்களுக்கு திருவிழாவில் அமைந்தது. அஜித்தின் துணிவு திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் சமூக அக்கறை கலந்த ஒரு படமாக உருவாகியதால் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஆரம்பத்தில் இருந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

மறுபக்கம் தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் வழக்கம் போல குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக அமைந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. இரண்டு திரைப்படங்களும் வசூல் ரீதியாக வெற்றி பெற்று வருகிறது. அதன்படி பார்க்கையில் தமிழகத்தில் அஜித்தின் துணிவு திரைப்படம்..

முதல் வார முடிவில்  92 கோடி வசூல் செய்துள்ளது. தளபதி விஜயின் வாரிசு படம் 90 கோடி மொத்தமாக வசூல் செய்திருக்கிறாராம் இதன் மூலம் முதல் வாரத்தில் அஜித்தின் துணிவு கை ஓங்கி இருக்கிறது. இது தற்பொழுது விஜய்க்கு மிகப்பெரிய ஒரு சோகத்தை ஏற்படுத்தி உள்ளதாம். பொறுத்து பார்க்கலாம் அடுத்தடுத்த வாரங்களில் என்ன மாற்றம் வேண்டுமானாலும் நடக்கும்..