முதலில் விஜய் அப்புறம்தான் ரஜினி.! அடிச்சுதூக்கும் கார்த்தி

0

இந்த தீபாவளிக்கு விஜய் நடித்த பிகில் திரைப்படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகியது, இந்த திரைப்படத்துடன் கார்த்தியின் கைதி திரைப்படமும் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்று வருகிறது. கைதி திரைப்படம் குறைவான பட்ஜெட்டில் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சக்கை போடு போட்டு வருகிறது.

கைதி திரைப்படத்தின் மூலம் மக்கள் அனைவரும் நல்ல கதையை தான் எதிர்பார்க்கிறார்கள் என தெரிகிறது, மேலும் கைதி திரைப்படம் ஒரே இரவில் நடைபெறும் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது, இந்த படத்தில் கார்த்தி தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் இதே தயாரிப்பில் கார்த்தி சுல்தான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

முதலில் சுல்தான் திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் தான் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது ஆனால் படப்பிடிப்பில் சில பிரச்சனைகள் காரணமாக தாமதமாகியது தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சுல்தான் திரைப்படம் வருகிற ஜனவரி மாதம் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன ஏற்கனவே பொங்கல் நாளில் ரஜினியின் தர்பார் திரைப்படம் வெளியாக இருக்கும் இந்த நிலையில் கார்த்தியின் சுல்தான் திரைப்படம் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

எது எப்படியோ எந்த திரைப்படத்தின் கதை நல்லா இருக்குதொ அந்த திரைப்படத்தை தான் ரசிகர்கள் விரும்புவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.