விடுதலை படத்தின் “எப்போதும் மாறாது” ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ.! இணையத்தில் அனல் பறக்கும் வீடியோ…

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலைப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் பாடலின் ப்ரோமோ வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அது மட்டுமல்லாமல் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது வெளியாகும் என்று பட குழு தற்போது அறிவித்திருக்கிறது இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள்.

தென்னிந்திய சினிமாவில் இதுவரைக்கும் தோல்வியை கண்டிடாத இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருப்பவர் இயக்குனர் வெற்றிமாறன். இவர் நடிகர் தனுசை வைத்து பொல்லாதவன் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பிறகு பல வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.

அது மட்டுமல்லாமல் வெற்றி மாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் வெளியான ஆடுகளம், வடசென்னை ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து அசுரன் என்ற ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் படத்தையும் கொடுத்துள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.

இந்த படத்திற்காக பல தேசிய விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தற்போது காமெடி நடிகனாக இருந்து சினிமாவில் ஒரு கலக்கு கலக்கிய நடிகர் சூரி அவர்களை கதாநாயகனாக நடிக்க வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன். இந்த படத்திற்கு விடுதலை என்று தலைப்பை வைக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படக்குழுவினர் அனைவரும் துப்பாக்கியை ஏந்தி கொண்டவாறு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தனர். இந்த புகைப்படம் இணையத்தில் இன்றுவரையிலும் வைரலாகி வருகிறது. விடுதலைப் படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் நேற்று விடுதலை படத்தில் அமைந்துள்ள ஃபர்ஸ்ட் சிங்கிள் பிரமோ ஒன்று இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

இசைஞானி இளையராஜா இசையில் தனுஷ் பாடியுள்ள இந்த பாடல் பிப்ரவரி 8ஆம் தேதி வெளியாக இருக்கிறது. “எப்போதும் மாறாது” என்று தொடங்கும் இந்த பாடலை நடிகர் தனுஷ் அவர்கள் முதன் முறையாக இளையராஜாவுடன் இணைந்து பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக தனுஷ் அவர்கள் வெற்றிமாறன் உடன் இணைந்தால் அந்த படம் ஹிட்தான் அந்த வகையில் விடுதலை படத்தில் இந்த பாடலை பாட வைத்துள்ளாராம் இயக்குனர் வெற்றி மாறன். அது மட்டுமல்லாமல் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

Leave a Comment